Friday, March 17, 2017

'பாகுபலி 2' டிரைலரின் உலக சாதனை


'பாகுபலி 2' டிரைலரின் உலக சாதனை



17 மார்,2017 - 16:05 IST






எழுத்தின் அளவு:








'பாகுபலி 2' படத்தின் டிரைலர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நேற்று காலை யு டியூப் மற்றும், ஃபேஸ்புக் ஆகிய தளங்களில் வெளியிடப்பட்டது. வெளியான சில மணி நேரங்களிலேயே சாதனை மேல் சாதனை படைத்து வந்த நான்கு மொழி டிரைலர்களும் 24 மணி நேரத்தில் 'யு டியூப், ஃபேஸ்புக்' ஆகிய இரண்டிலும் சேர்த்து 5 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது.

இது பற்றி படத்தின் இயக்குனர் ராஜமௌலி, உட்பட படக்குழுவினர் அனைவரும் அந்தப் பெருமையைக் குறிப்பிடும் விதத்தில் போஸ்டர் ஒன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்கள். 24 மணி நேரத்தில் ஒரு இந்தியத் திரைப்பத்தின் 5 கோடி பார்வை சாதனை என்பது சாதாரண ஒன்றல்ல.

உலக அளவில் 24 மணி நேரத்தில் இணையதளங்களில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்களில் 'பாகுபலி 2' தெலுங்கு டிரைலர் 22 மில்லியன் பார்வைகளுடன் தற்போது 23வது இடத்தில் உள்ளது. ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட 'ரிங்ஸ் - தி ஹிட்டன் கேமரா பிரான்க்' என்ற வீடியோ 24 மணி நேரத்தில் பல்வேறு தளங்களில் 200 மில்லியன் பார்வைகளைப் பெற்று நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. மற்ற மொழிகளையும் கணக்கில் சேர்த்தால் 'பாகுபலி 2' டிரைலர் 10 இடங்களுக்குள் வரும்.

'பாகுபலி 2' டிரைலர் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாய்ப்புகள் உள்ளது.


0 comments:

Post a Comment