ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோன்
18 மார்,2017 - 13:31 IST
ஷங்கர் இயக்கத்தில் '2.0' படத்தில் நடித்து முடித்ததும் சில வார ஓய்வுக்குப் பிறகு பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. 'கபாலி' படத்தை தொடர்ந்து மீண்டும் ரஜினியும், பா.ரஞ்சித்தும் இணையும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது!
தாணுவின் பைனான்ஸில் ஃபர்ஸ்ட்காப்பி அடிப்படையில் தனுஷின் 'வுண்டர் பார் ஃபிலிம்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கவிருக்கிறது. படத்தை தயாரித்து தாணு கையில் தனுஷ் கொடுத்த பிறகு அவர் மிரட்டலான விளம்பரங்களை செய்து படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பார்.
இந்தப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை வித்யாபாலன் நடிக்கவிருக்கிறார் என்று சில வாரங்களுக்கு முன் ஒரு தகவல் வெளியாகியிருந்தது. தற்போதைய தகவலின்படி, வித்யா பாலன் இப்படத்தில் நடிக்கவில்லையாம்.
ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஹிந்தி நடிகை தீபிகா படுகோனிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். கதையைக் கேட்ட அவர் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் படக்குழுவினர் தரப்பிலிருந்து இது குறித்த எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.
ஏற்கெனவே 'கோச்சடையான்' என்ற அனிமேஷன் படத்தில் ரஜினியுடன் தீபிகா படுகோன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment