Saturday, March 18, 2017

‘படையப்பா’ பன்ச் டயலாக்கை ஆல்டர் செய்த அஸ்வின் தாத்தா


ashwin thatha STRஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.


இதில் சிம்பு உடன் தமன்னா, ஸ்ரேயா, மகத், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடிக்க, யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் சிம்பு ஏற்றுள்ள கேரக்டரான அஸ்வின் தாத்தா என்ற கேரக்டரின் டீசர் வெளியானது.

2 நிமிடம் ஓடக்கூடிய இந்த டீசர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

இதில் சிம்பு ஆம்பள பசங்க எப்படி இருக்க வேண்டும் என பன்ச் டயலாக் பேசுவார்.

அதில்….

பசங்கன்னா பொறுப்பா இருக்கனும் பொறுக்கித்தனம் பண்ணக்கூடாது.

பொறுமையா இருக்கனும். பெர்மிசன் இல்லாம பொண்ண தொடக்கூடாது.

கட்டுபாடுடோட இருக்கனும். குடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாது.

மொத்தத்துல பசங்கன்னா பசங்களா இருக்கனும் என்று சிம்பு பன்ச் பேசியிருப்பார்.

இதுபோன்ற பன்ச் டயலாக் 1999ஆம் ஆண்டு ரஜினியின் படையப்பா படத்தில் இடம் பெற்று இருந்தது.

அதில் பொம்பளன்னா பொறுமையா இருக்கனும், அமைதியா இருக்கனும் பஜாரித்தனம் பண்ணக்கூடாது என்று ரஜினிகாந்த் பேசியிருப்பார்.

இதை ஆல்டர் செய்து அஸ்வின் தாத்தா பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

In Ashwin Thatha teaser simbu alter the Padaiyappa punch dialogue

0 comments:

Post a Comment