Thursday, March 2, 2017

மீண்டும் படம் இயக்கும் 'புதிய கீதை' ஜெகன்


மீண்டும் படம் இயக்கும் 'புதிய கீதை' ஜெகன்



02 மார்,2017 - 12:46 IST






எழுத்தின் அளவு:








விஜய்யை வைத்து புதிய கீதை என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஜெகன். அந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. அதன் பிறகு தன்னுடைய பெயரை ஜெகன்நாத் என்று மாற்றிக் கொண்டு 'கோடம்பாக்கம்', 'ராமன் தேடிய சீதை' ஆகிய படங்களை இயக்கினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ஒரு படத்தை இயக்குகிறார் ஜெகன் நாத்.

அவர் அடுத்து இயக்கும் படத்திற்கு 'என் ஆளோட செருப்பை காணோம்' என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளார். இந்த படத்தில் தமிழ் என்ற புதுமுக நடிகரை கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார். கதாநாயகியாக நடிக்க, 'கயல்' ஆனந்தி நடிக்கிறார். இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் ரேகா, கே.எஸ்.ரவிக்குமார், 'யோகி' பாபு, பாலசரவணன், லிவிங்ஸ்டன், ஜெயபிரகாஷ், சிங்கம் புலி ஆகியோரும் நடிக்கிறார்கள். க

தாநாயகி தொலைத்த ஒரு ஜோடி செருப்பைச் சுற்றி நடக்கும் கதையாம் இப்படம்! ஒரு அடைமழை காலத்தில் அந்த செருப்புகளை தேடி குடையுடன் பயணிக்கிறார் கதாநாயகன். அந்த பயணத்தில் அவர் எதிர்கொள்ளும் சம்பவங்களாம் படம்.


0 comments:

Post a Comment