Friday, March 3, 2017

சிறு தயாரிப்பாளர்களுக்கு பாதுகாப்பு தரும் அணி : தயாரிப்பாளர்கள் முன்னேற்ற அணி


சிறு தயாரிப்பாளர்களுக்கு பாதுகாப்பு தரும் அணி : தயாரிப்பாளர்கள் முன்னேற்ற அணி



03 மார்,2017 - 17:18 IST






எழுத்தின் அளவு:








தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு ஏப்., 2-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இம்முறை நடிகர் சங்க தேர்தல் அளவுக்கு பரபரப்பு மிகுந்த தேர்தலாக இருக்கும் என தெரிகிறது. நடிகர் சங்கத்தை கைப்பற்றியது போன்று தயாரிப்பாளர் சங்கத்தையும் கைப்பற்றி நல்லது செய்ய வேண்டும் என விஷால் தலைமையில் ஒரு அணி களமிறங்குகிறது. இதுதவிர கேயார் தலைமையில் ஒரு அணி, ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு அணி, கலைப்புலி ஜி.சேகரன் தலைமையில் ஒரு அணி, அம்மா டி.சிவா தலைமையில் ஒரு அணி... என 5 அணிகள் களமிறங்குகின்றன.

இந்நிலையில் ராதாகிருஷ்ணன் தலைமையில் கே.ராஜன், சுரேஷ் காமாட்சி, சிவசக்தி பாண்டியன் ஆகியோர் களமிறங்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் முன்னேற்ற அணியின் அறிமுக கூட்டம் சென்னையில் நடந்தது. அப்போது அந்த அணி சார்பில் முக்கிய கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.

அதில், எங்கள் அணி சுயநலம் இல்லாத அணியாக செயல்படும். சிறு தயாரிப்பாளர்களுக்கு பாதுகாப்பு தரும், வீரம் மிக்க அணியாக, ஆளுமை திறம்பட மிக்க அணியாக நாங்கள் இருப்போம் என்றனர்.

ஒவ்வொரு நடிகரும் படம் எடுக்கணும், அப்போது தான் தயாரிப்பாளர்களின் வலி புரியும். நடிகர் சங்கத்தில் மாற்றங்கள் வர வேண்டும் என்று தான், நான் உட்பட பலரும் ஓட்டு போட்டோம். ஆனால் அந்த வேலையை முடிக்காமல் இன்னொரு துறை வேலையும் பார்ப்பேன் என்று சொல்வது நியாயம் இல்லை. முதலாளியும், தொழிலாளியும் அதாவது இரண்டு இடத்திலும் ஒரே ஆள் இருப்பது ஜனநாயகம் இல்லை என்று இந்த அணியில் உள்ள நடிகர் ஸ்ரீகாந்த் கூறினார்.

இதனிடையே தயாரிப்பாளர்கள் முன்னேற்ற அணியினர், முதல்வர் இடைப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். அப்போது சுமார் 600 படங்கள் ரிலீஸாகாமல் உள்ளன. இவற்றுக்கு மானியம் வழங்க வேண்டும். கேபிள் டிவியில் படங்கள் திருட்டு தனமாக ஒளிபரப்பப்படுகிறது, இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது.


0 comments:

Post a Comment