அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தில் விஜய்யுடன் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்திற்கு தளபதி என்றே பெயரை படக்குழு தேர்வு செய்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.
மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் ரஜினிகாந்த்-மம்மூட்டி நடித்திருந்தனர். இப்படம் 1991 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
மேலும் விஜய்யை ரசிகர்கள் தளபதி என்று அழைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
எனவே தளபதி என்று பெயர் பொருத்தமாக இருப்பதாக படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
Rajinis hit movie Thalapathy may be title for vijay 61
0 comments:
Post a Comment