Sunday, March 12, 2017

கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றார் வீணா மாலிக்


கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றார் வீணா மாலிக்



12 மார்,2017 - 16:16 IST






எழுத்தின் அளவு:








பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக், தனது கணவர் ஆசத் பஷீரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளாராம். வீணா மாலிக்கிற்கும், ஆசத் பஷீர் கானுக்கும் 2013 ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆப்ரம் என்ற 2 வயது மகனும், ஒரு வயதாகும் அமல் என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் இந்த ஆண்டு ஜனவரி மாதம், விவாகரத்து மனு தாக்கல் செய்தனர். இருவருக்கும் இடையே சமரசம் செய்து கொள்ள முடியாத கருத்து வேறுபாடுகள் இருப்பதால், தாங்கள் பிரிவதற்கு முடிவு செய்ததாக விவாகரத்திற்கு காரணம் கூறப்பட்டுள்ளது. இவர்களின் மனுவை ஏற்ற கோர்ட், சமீபத்தில் விவாகரத்து வழங்கி உள்ளது. இதனால் தற்போது, தான் நடித்து வந்த ஹக் மெகர் படத்தின் வேலைகளில் மீண்டும் இறங்கி உள்ளார். ஏறக்குறைய முடிந்து விட்ட ஹக் மெகர் படத்தில் இன்னும் 25 சதவீதம் வேலைகள் மட்டுமே மீதம் உள்ளன.


0 comments:

Post a Comment