நயன்தாராவின் ‛டோரா' திருட்டு கதை - பஞ்சாயத்து ஆரம்பம்
03 மார்,2017 - 11:08 IST
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, சமீபகாலமாக கதையின் நாயகியாக நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்து வரும் முக்கியமான படங்களில் த்ரில்லர் படமான ‛டோரா' படமும் ஒன்று. சற்குணம் தயாரிப்பில் அவரது உதவியாளர் தாஸ் ராமசாமி இயக்கி உள்ளார். இப்படம் ரிலீஸ்க்கு தயாராகி வரும் நிலையில், ‛டோரா' படத்தின் கதை என்னுடையது என்று ஒருவர் பஞ்சாயத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அவர் பெயர் சாட்டிலைட் ஸ்ரீதர்.
யார் இந்த சாட்டிலைட் ஸ்ரீதர்.? டிவி சேனல்களுக்கு படங்களை சாட்டிலைட் உரிமம் வாங்கி கொடுக்கும் முகவராக செயல்பட்டு வருகிறார் இந்த ஸ்ரீதர். அதனாலேயே இவரது பெயர் ‛சாட்டிலைட்' ஸ்ரீதர் என்றாகிவிட்டது. இவர் வடபழனியில் வசித்து வருகிறார். 2013-ம் ஆண்டு, இவர் ஒரு காரை மையப்படுத்தி கதை இயக்கியுள்ளார். அந்த என்ன கதை என்று நம்மிடம் அவர் கூறியதாவது...
‛‛ஒரு காரை மையமாக வைத்து கதை எழுதினேன். ஒரு கார், ஒரு பெண், அந்த பெண்ணை ஒரு கும்பல் ஏமாற்றி கொலை செய்து விடுகிறார்கள். அந்த காரையும் மறைமுகமாக ஒரு இடத்தில் மறைத்து வைத்து விடுகிறார்கள். பின்னர் அந்தகார், தானாக இயங்கி, பழிதீர்ப்பது போன்ற கதை. இந்தகதையை 2013-ம் ஆண்டு எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்துள்ளேன். மேலும் படத்திற்கும் ‛அலிபாபாவும் அற்புதகாரும்' என்ற பெயர் வைத்துள்ளேன். நான் தங்கியிருந்த பிளாட்டில் சற்குணம் அலுகவலத்தில் வேலை பார்க்கும் உதவி இயக்குநர்கள் சிலர் தங்கியிருந்தனர். அப்போது அவர்களிடம் இந்த கதை பற்றி பேசியிருக்கிறேன். இப்போது எனது கதையையே திருடி, டோரா படத்தை இயக்கியுள்ளார்கள். மேலும், நான் ஒரு மெக்கானிக் கடையில் காரை தயார் செய்தேன். அதே மெக்கானிக்கிடம் சென்று நான் தயாரித்தது போன்று ஒரு காரை தயார் செய்து படம் எடுத்துள்ளார்கள். இதுதொடர்பாக எழுத்தாளர் சங்கத்திடம் புகார் செய்திருக்கிறேன். அவர்களும் உரிய நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள். இல்லையென்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
0 comments:
Post a Comment