விஜய் சேதுபதிக்கு ஜோடியாக எமி ஜாக்சன்
13 மார்,2017 - 15:42 IST
தமிழ் சினிமாவில் பிஸி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது கைசவம் அரை டஜன் படங்களுக்கு மேல் வைத்திருக்கிறார். இந்நிலையில், இதற்கு தானே ஆசைப்பட்டாய், ரெளத்திரம், காஷ்மோரா'' படங்களை இயக்கிய கோகுல், மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இதில் நடிகை எமி ஜாக்சன் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக எமியிடம் பேசி வருவதாகவும், இன்னும் அவர் உறுதி சொல்லாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் விரைவில் எமி சம்மதம் சொல்வார் என்கிறார்கள். கோகுல்-விஜய் சேதுபதி கூட்டணியில் வெளியாக உள்ள இப்படம் இதற்கு தானே ஆசைப்பட்டாய் படத்தின் இரண்டாம் பாகமாக கூட இருக்கலாம் என்கிறார்கள்.
0 comments:
Post a Comment