அஜித் மகனின் பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்கள்!
03 மார்,2017 - 09:45 IST
அஜித்தின் ஒவ்வொரு பிறந்த நாளையும் அவரது ரசிகர்கள் படு விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அன்றைய தினத்தில் அவர் ரசிகர்களை சந்திப்பதில்லை. என்றாலும், அவரது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள். அதேபோல் நேற்று அஜித் மகன் ஆத்விக்கின் முதல் பிறந்த நாளை யும் அஜித்தின் ரசிகர்கள் பெரிய அளவில் போஸ்டர்கள் ஒட்டி உற்சாகமாக கொண்டாடியுள்ளனர்.
அதோடு, அஜித்தின் பிறந்த நாளை போலவே ஆத்விக்கின் பிறந்த நாளிலும் நற்பணிகள் செய்ய வேண்டும் என்று, பல ஊர்களில் இலவச ரத்ததான முகாம்கள் நடத்தியுள்ளனர். அதேபோல் ஏழை மக்கள் அதிகமாக வாழும் பல பகுதிகளில் அன்னதானமும் வழங்கியுள்ளனர். மேலும், இணையதளங்கள் வாயிலாக குட்டி தல ஆத்விக்கிற்கு லட்சக்கணக்கான வாழ்த்து மழைகளையும் பொழிந்து டிரண்டிங் செய்துவிட்டனர்.
0 comments:
Post a Comment