வண்டுக்கடி வாங்கிய ஆர்யா!
23 மார்,2017 - 04:42 IST
'தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுக்காவிட்டால், கோலிவுட், நம்மை சுத்தமாக மறந்து விடும். ரசிகர்களும் மறந்து விடுவர்' என்பதை, தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார் ஆர்யா. சமீபகாலமாக, இவரது படங்கள் சரியாக போகவில்லை. இதனால், அடுத்து நடிக்கும், கடம்பன் படத்தை வெற்றிப் படமாக்க வேண்டும் என்பதற்காக கடுமையான உழைக்கிறார் அவர். மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் இந்த படத்தில், இவருடன் கேத்ரின் தெரசா, ஜோடி சேர்ந்துள்ளார். மலைத்தேன் எடுக்கும் சமூகத்தைச் சேர்ந்தவராக இருவரும் நடித்துள்ளனர். படப்பிடிப்பின் போது, தேனீ மட்டுமல்லாமல், ஏராளமான பூச்சி மற்றும் வண்டுகளிடம் கடி வாங்கி, நடித்துள்ளாராம் ஆர்யா.
Advertisement
0 comments:
Post a Comment