அமெரிக்க படப்பிடிப்பை முடித்த நானி
10 மார்,2017 - 15:45 IST
ஜென்டில்மேன், மஜ்னு, நேனு லோக்கல் என நானியின் தெலுங்கு படங்கள் தொடர் வெற்றியை குவித்துள்ளன. தற்போது நானி நடித்து வரும் நின்னு கோரி திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. வெளிநாடு படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்ற படக்குழு அமெரிக்க படப்பிடிப்பை நிறைவு செய்து ஐதராபாத் திரும்பியுள்ளது. டிவிவி தன்யா தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வரும் நின்னு கோரி திரைப்படத்தில் நடிகை நிவேதா தாமஸ் நானிக்கு ஜோடியாக நடிக்கின்றார். நடிகர் ஆதி முக்கிய வேடத்தில் இப்படத்தில் நடிக்கின்றார். அடுத்த கட்ட படப்பிடிப்பு மார்ச் மூன்றாவது வாரத்தில் ஐதராபாத்தில் நடைபெறும் என படக்குழு தெரிவித்துள்ளது. மலையாள இசையமைப்பாளர் கோபிசுந்தர் இசையமைக்கும் இத்திரைப்படத்தை ஜூலை 7ல் திரைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றதாம்.
0 comments:
Post a Comment