மகாபாரதத்தில் நடிக்க அமீர்கான் ஆர்வம் - ராஜமெளலி
15 ஏப்,2017 - 18:35 IST
இந்தியத் திரையுலகமே வியந்து பார்க்கும் ஒரு இயக்குநராக எஸ்.எஸ்.ராஜமௌலி இருக்கிறார். பாகுபலி, பாகுபலி-2 என்ற சரித்திரப்படங்களை இயக்கி உலக புகழ் பெற்றுவிட்டார். இருந்தாலும் அவரது இயக்கத்தில் வந்த மகதீரா, நான் ஈ ஆகிய படங்கள் பாகுபலி படத்திற்கு முன்பே அவரைப் பற்றிப் பேச வைத்தது. தற்போது பாகுபலி-2 படத்தினை ரிலீஸ் செய்ய, புரொமோஷனுக்காக ஊர் ஊராக சுற்றி வருகிறார். இவர் நடிகர் அமீர்கானை சந்தித்து மகாபாரதம் தொடர்பாக பேசியதாக தகவல் வெளியானது.
இதுப்பற்றி ராஜமெளலி கூறியிருப்பதாவது... ‛‛நான் அமீர்கானை சந்தித்து பேசியது உண்மை தான். மகாபாரதத்தை படமாக இயக்க ஆசைப்படுகிறேன், இதை பல முறை தெரிவித்து இருக்கிறேன். நிச்சயமாக மகாபாரதத்தை படமாக்குவேன், ஆனால் பாகுபலி-2 படத்திற்கு பிறகு இல்லை. மகாபாரதம் போன்ற ஒரு காவியத்தை படமாக்க எனக்கு நல்ல நடிகர்கள் தேவை. அதனால் தான் அமீர்கானை சென்று சந்திந்தேன். அவரும் இப்படத்தில் நடிக்க மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார். ஆனால் எப்போது இது சாத்தியமாகும் என்று தெரியவில்லை. இப்போதைக்கு என் எண்ணம் எல்லாம் பாகுபலி-2 பற்றி தான் இருக்கிறது" என்றார்.
பாகுபலி-2 படம் இந்த மாதம் 28ஆம் தேதி உலம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
0 comments:
Post a Comment