Monday, April 17, 2017

என்னை நிம்மதியாக வாழ விடுங்கள்: மைனா நந்தினி உருக்கம்


என்னை நிம்மதியாக வாழ விடுங்கள்: மைனா நந்தினி உருக்கம்



17 ஏப்,2017 - 12:21 IST






எழுத்தின் அளவு:








சின்னத்திரை நடிகை மைனா நந்தினியின் கணவர் கார்த்திக் கடந்த சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் தன் மகன் சாவுக்கு நந்தினியும், அவரது தந்தையும்தான் காரணம் என்று கணவரின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் என்னை நிம்மதியாக வாழ விடுங்கள் என்று மைனா நந்தினி உருக்கமா கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: காதலித்து திருமணம் செய்து கொண்டதுதான் நான் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு. அவருடன் வாழ்ந்த காலத்தில் சந்தோஷமாகத்தான் இருந்தேன். கடந்த 3 மாமாக ஒத்துப்போகவில்லை. அவரது அன்பு அக்கறை குறையத் தொடங்கியது. அதனால் விலகி இருந்தேன். அவரது திடீர் மரணம் என் வாழ்க்கையை திருப்பி போட்டுவிட்டது. அதைவிட அவரது பெற்றோர்கள் என்மீது சுமத்தும் அவதூறுகளைத்தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒரு பெண்ணாக எல்லா அமானங்களையும் சந்தித்து விட்டேன். நான் ஏமாந்து விட்டேன். ஏமாற்றப்பட்டுவிட்டேன் என்பதை மட்டும் என்னால் உணரமுடிகிறது.


கார்த்திக் இறந்த உடனேயே நானும் இறந்திருக்க வேண்டும். ஆனால் அதனால் எந்த பிரச்சினையும் தீரப்போவதில்லை. அதோடு என்னை நம்பி என் பெற்றோர், தம்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கிறது. அதற்காகவே நான் வாழ்கிறேன். நான் இப்போது வலிகளோடு போராடிக் கொண்டிருக்கிறேன். ஒரு நடிகையாக பார்க்காமல் என்னை ஒரு பெண்ணாக பார்த்து என்னை நிம்மதியாக இருக்கவிடுங்கள். என்று கூறியுள்ளார் மைனா நந்தினி.

0 comments:

Post a Comment