விவசாயிகளுக்காக உண்ணாவிரதமிருந்த நடிகர் அபிசரவணன்!
18 ஏப்,2017 - 08:29 IST
விவசாயம் காக்க, விவசாயியை காக்க எனும் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக சென்னை மெரினாவில் அமைதிப்பேரணி நடத்திய கேர் அண்ட் வெல்பேர் அமைப்பு நடிகர் அபிசரவணனு டன் இணைந்து, டெல்லியில் போராடிய விவசாயிகள் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர்.
மேலும், ஏராளமான மாணவர்களுடன் சாயம் இயக்குனர் ஆண்டனி, எடிட்டர் கோபி, கவிஞர் மதுரா, நடிகை ஐஸ்வர்யா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்துக்கள் தெரிவித்து பேசினர். மாலை 6 மணிக்கு மோர் குடித்து உண்ணாவிரத போராட்டத்தை நிறைவு செய்தனர்.
0 comments:
Post a Comment