Monday, April 17, 2017

நாளை திரையரங்கு தினம்: கமலா தியேட்டரில் கொண்டாடப்படுகிறது


நாளை திரையரங்கு தினம்: கமலா தியேட்டரில் கொண்டாடப்படுகிறது



17 ஏப்,2017 - 12:34 IST






எழுத்தின் அளவு:








1895 ஆம் ஆண்டு லூமியர் சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சினிமாவை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்த முதல் மனிதன் சாமிக்கண்ணு வின்சென்ட். திரையிடும் கருவியை தனது தோள்களில் சுமந்துகொண்டு தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் கொண்டுசென்று சலனப்படத்தைக் காட்டியவர். திரையரங்குகளில் பயன்படுத்தப்பட்ட புரொஜெக்டர்களுக்கான தென்னிந்தியாவின் முதல் டீலர் இவர்தான்.

வெரைட்டி ஹால் என்ற பெயரில் முதல் திரையரங்கை கோவையில் 1914 ஆம் ஆண்டு துவங்கி சினிமாவை வெற்றிகரமானத் தொழிலாக மாற்றிக்காட்டியவர் .22 வயதில் சினிமாவை நேசிக்கத் தொடங்கிய சாமிக்கண்ணு தனது இறுதி காலம் வரை சினிமாவிற்காகவே வாழ்ந்தவர். அவரின் பிறந்தநாளான ஏப்ரல் 18 ஐ ஆண்டுதோறும் திரையரங்கு தினமாக கொண்டாடப்படுகிறது.

சென்னை கமலா திரையரங்கில் நாளை காலை 8. மணிக்கு 2011ல்.தேசிய விருதுபெற்ற "வாகை சூடவா " திரைப்படத்தை திரையிட்டு, 10.00 மணியளவில் வாகை சூடவா படக்குழுவினரோடு இவ்விழா கொண்டாடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பர்ஸ்ட் ஸ்டெப் பி.ஆர் சர்வீஸ், எப்.என் எண்டர்டெயின்மெண்ட், வில்லேஜ் தியேட்டர் ஆகிய நிறுவனங்கள் செய்துள்ளன.


0 comments:

Post a Comment