
கடந்த சில மாதங்களுக்கு முன்னால் கால்முறிவால் சிகிச்சை பெற்று வந்த கமல் படங்களில் நடிக்கவில்லை. மாறாக முதல்முறையாக ஒரு விளம்பரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், தனது கால் சரியானதை அடுத்து மீண்டும் படத்தில் நடிக்க ஆரம்பித்த கமல் வீட்டில் கடந்த வாரம் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது.
அந்த விபத்தில் இருந்து தப்பித்த கமல், தற்போது படங்களுக்கு ஒரு சிறிய இடைவேளை விட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில், இந்தியில் பிரபலமான “பிக் பாஸ்” என்ற நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பை தொகுத்து வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment