Wednesday, November 2, 2016

பாலகிருஷ்ணா படம் வெற்றி அடைய 100 கோவில்களில் வழிபாடு


பாலகிருஷ்ணா படம் வெற்றி அடைய 100 கோவில்களில் வழிபாடு



02 நவ,2016 - 16:25 IST






எழுத்தின் அளவு:








பாலகிருஷ்ணாவின் 100வது திரைப்படமான கௌதமிபுத்ர சட்டகர்னி எனும் சரித்திர திரைப்படத்தை இயக்குனர் கிரிஷ் இயக்கி வருகின்றார். 2017 ஜனவரியில் திரைக்கு வரவுள்ள இத்திரைப்படம் வெற்றி அடைய வேண்டி 100 கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றதாம். சட்டகர்னி மன்னனாக பாலகிருஷ்ணா நடிக்கும் இப்படத்தின் டீசர் வெளிவந்து பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இப்படம் வெற்றி அடைய வேண்டி 100 கோவில்களில் குங்குமார்ச்சனை செய்து வழிபட என்.பி.கே ஹெல்பிங் ஹேன்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பாலகிருஷ்ணா ரசிகர்களும் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். நவம்பர் 5 ஆம் தேதி பாலகிருஷ்ணா இவ்வழிபாட்டினை துவங்கி வைக்கின்றார். பாலிவுட் நடிகையும் அரசியல் பிரபலமுமான ஹேமமாலினி இப்படத்தில் ராஜமாதாவாக நடிக்கின்றார். ஸ்ரேயா நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார்.


0 comments:

Post a Comment