Wednesday, November 2, 2016

கௌதமி பிரிவு… கமல்-ஸ்ருதி என்ன சொல்கிறார்கள்?

kamal gautami shruthihassanகமலுடன் 13 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த நான் இப்போது பிரிகிறேன். இது என் வாழ்க்கையில், நான் எடுத்த பேரழிவு முடிவு என கௌதமி நேற்று அறிக்கை வெளியிட்டார்.


இதனையடுத்து, கமல் கூறியதாக ஒரு அறிக்கை வெளியானதும், அதற்கு கமலின் மக்கள் தொடர்பாளர் மறுப்பு வெளியிட்டதையும் நாம் முன்பே பார்த்தோம்.


தற்போது கமலே தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது…


‛‛இத்தருணத்தில் என் பெயரால் யாரோ அறிக்கை விட்டு விளையாடுவது விவேகமற்ற அநாகரீகச் செயல்.

நான் இச்சமயம் அறிக்கை ஏதும் வெளியிடுவதாய் இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.


மேலும் அவர்களின் பிரிவுக்கு கமலின் கமள் ஸ்ருதியும் காரணம் என கூறப்பட்டது.


இது தொடர்பாக ஸ்ருதிஹாசனின் தன்னுடைய செய்தி தொடர்பாளர் வழியாக அனுப்பிய அறிக்கை இது…


“யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியும், அவர்களுடைய முடிவுகளை பற்றியும் ஸ்ருதி எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.


அவரை பொறுத்தவரை தன்னுடைய பெற்றோர், சகோதரி என தன்னுடைய குடும்பத்தின் மேல் அவர் வைத்திருக்கும் அன்பும், மரியாதையும் மட்டும் தான் பிரதானம்.” என தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment