என் அப்பாவை அவமதித்துவிட்டார் கரண் ஜோகர் - பாடகரின் மகன் வேதனை
02 நவ,2016 - 15:18 IST
மறைந்த பிரபல பாடகர் முகமது ரபி. இவரது ஷாகித் ரபி, இவர் கரண் ஜோகரை கடுமையாக தாக்கி பேசியிருக்கிறார். அதற்கு காரணமும் உள்ளது. கரண் ஜோகர் இயக்கத்தில், சமீபத்தில் வெளியான படம் ‛ஏய் தில் ஹே முஷ்கில்'. இந்தப்படத்தில் ஒரு டயலாக்கில் அனுஷ்கா சர்மா பேசும்போது, முகமது ரபி, பாட மாட்டார், அழுவார் என்று கூறியிருப்பார். இது அவரது மகன் ஷாகித் ரபியை கோபமடைய செய்துள்ளது.
இதுப்பற்றி ஷாகித் ரபி கூறியிருப்பதாவது... ‛‛என் அப்பா கரண் ஜோகரின் அப்பாவின் படத்தில் ஏராளமான படங்களை பாடியிருக்கிறார். நான் இன்னும் படம் பார்க்கவில்லை, ஆனால் இப்படியொரு டயலாக்கை வைத்திருப்பதன் மூலம் அவர் எவ்வளவு பெரிய முட்டாள் என்பது தெரிகிறது. அவருக்கு என் அப்பா முகமது ரபியை பற்றி தெரியாது, மிகவும் பிரபலமான பாடகர் அவர், எப்படி அவர் இதுபோன்றதொரு செயலை செய்தார் என்று தெரியவில்லை. கரணை எண்ணும்போது வெட்கமாக உள்ளது'' என்று தன் மனக்குமுறலை கொட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment