நாளை சூர்யாவின் எஸ்-3 பர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு!
06 நவ,2016 - 10:04 IST
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள பிரமாண்ட படம் எஸ்-3. முந்தைய இரண்டு சிங்கம் படங்களை விடவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் 100 நாட்களுக்கு மேல் நடித்துள்ளார் சூர்யா. அதில் போலீசாக நடித்த காட்சிகள் மட்டும் 70 நாட்களுக்கு மேல் படமாக்கப்பட்டுள்ளதாம். உள்நாடு, வெளிநாடு என்று பல நாடுகளில் இரவு பகலாக படப்பிடிப்பு நடந்து வந்த எஸ்-3 படப்பிடிப்பு சென்னையில் தொடங்கிய சென்னையிலேயே முடிந்தது.
தற்போது இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே, ஏற்கனவே அறிவித்தது போன்று நவம்பர் 7-ந்தேதியான நாளை எஸ்-3 படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகயிருக்கிறது. இந்த டீசர் 1 நிமிடம் 16 விநாடிகள் இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசர், நள்ளிரவில் வெளியாகிறதா? இல்லை பகலில் வெளியாகிறதா? என்பது பற்றிய விவ ரத்தை இன்று அறிவிப்பார்கள் என்று தெரிகிறது.
0 comments:
Post a Comment