Sunday, November 6, 2016

பூரி ஜெகன்நாத்தை ஒதுக்கும் முன்னணி நடிகர்கள்?


பூரி ஜெகன்நாத்தை ஒதுக்கும் முன்னணி நடிகர்கள்?



06 நவ,2016 - 12:16 IST






எழுத்தின் அளவு:








தெலுங்கு திரை உலகின் அதிரடி இயக்குனர் பூரி ஜெகன்நாத்தின் சமீபத்திய படங்கள் தோல்வியை தழுவியதால் முன்னணி நடிகர்கள் அவரை புறக்கணிப்பதாக டோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகின்றது. மகேஷ் பாபு பிரம்மோற்சவம் படத்தில் நடித்து வந்த போதே பூரி ஜெகன் நாத்தின் “ஜன கண மன” படத்தில் நாயகனாக நடிப்பதாக அ'றிவிக்கப்பட்டது. பிரம்மோற்சவம் படம் முடிந்த பின்னர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் மகேஷ் பாபுவின் அடுத்த படம் இயக்குனர் கொரட்டாலா சிவாவுடன் என உறுதியாகியுள்ளது.

லோஃபர் படத்தின் தோல்விக்கு பின்னர் கல்யாண் ராம் நாயகனாக நடிக்கும் ஐஎஸ்எம் படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கியிருந்தார். விமர்சக ரீதியாக வரவேற்பு பெற்ற இப்படம் வசூலில் பெருமளவில் சாதிக்கவில்லை. இதனால் பூரி ஜெகன்நாத்தின் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்த ஜூனியர் என்.டி.ஆரும் யோசனையில் ஆழ்ந்துள்ளாராம்.

இதனால் பூரி ஜெகன்நாத்தை முன்னணி நடிகர்கள் நிராகரிப்பதாக பரவலாக பேசப்படுகின்றது. இவற்றிற்கெல்லாம் சோர்ர்ந்து விடாத பூரி ஜெகன்நாத் அண்மையில் டோலிவுட்டின் இரண்டாம் நிலை நாயகனாக ராமைச் சந்தித்து கதை ஒன்றை கூறியுள்ளாராம். ராமும் இயக்குனர் பூரிஜெகன் நாத் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் விரைவில் இது குறித்த தகவல் வெளியாகும் எனவும் கூறப்படுகின்றது.


0 comments:

Post a Comment