சிம்பு-தமன்னா குத்தாட்டம்!
03 நவ,2016 - 09:06 IST
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில சிம்பு முன்று வேடங்களில் நடித்து வரும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். மதுரை மைக்கேலாக நடித்து முடித்து விட்ட சிம்பு, தற்போது அஸ்வின் தாத்தாவாக தமன்னாவுடன் நடித்து வருகிறார். 60 வயது வேடம் என்பதால் இந்த வேடத்துக்காக தனது கெட்டப்பை டோட்டலாக மாற்றி நடித்து வருகிறார் சிம்பு. அவ்வப்போது இப்படம் குறித்து தகவல்களை வெளியிட்டு பரபரப்பு கூட்டி வரும் சிம்பு, விரைவில் தமன்னாவுடன் ஒரு அதிரடியான பாடலில் செம குத்தாட்டமாடவும் தயாராகிக்கொண்டிருக்கிறார்.
இந்த படத்திற்கு இசையமைக்கும் யுவன் ஷங்கர் ராஜா, பையா படத்துக்கு கொடுத்த அடடா மழைடா அட மழைடா பாடல் பாணியில் ஒரு குத்துப் பாட்டும் கம்போஸ் செய்திருக்கிறாராம். இந்த பாடல் சிம்பு-தமன்னாவுக்கான டூயட் பாடல் என்றாலும் அதிரடியான பார்ஸ்ட் பீட் பாடலாம். அதனால் சிம்பு-தமன்னா இருவரும் வரிந்து கட்டி ஆடப்போகிறார்களாம். இந்த பாடலுக்காக சென்னையில் பிரமாண்ட செட் அமைக்கும் பணியும் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
0 comments:
Post a Comment