Wednesday, November 2, 2016

ராசி இல்லாத நடிகை என்று என்னை ஒதுக்கினார்கள்: சுருதிஹாசன்


201611020821563635_shruti-hassan-said-i-am-not-luckier-actress-set-aside_secvpfநடிகை சுருதிஹாசன் இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு:-


“பள்ளியில் படித்த காலங்களில் சுதந்திரமாக முடிவுகள் எடுத்தேன். வகுப்பில் நடக்கும் விஷயங்களை வீட்டில் தெரிவிப்பது இல்லை. வீட்டு பாடங்களை பற்றியும் சொல்ல மாட்டேன்.


குடும்பத்தினர் உதவிகள் இல்லாமல் நானே பாடங்களை படித்தேன். எனது தேவைகளை நானே கவனித்துக்கொண்டேன். அந்த பழக்கம் இப்போது சினிமாவில் எனக்கு உதவுகிறது.


திரையுலகில் சுதந்திரமாக முடிவுகள் எடுக்கும் தைரியத்தை அது கொடுத்து இருக்கிறது. சிறு வயதில் கற்பனையாக கதைகள் சொல்வேன். அந்த பழக்கமும் உதவுகிறது. இதனால் சினிமாவில் முன்னேறிக்கொண்டு இருக்கிறேன்.


தமிழ், தெலுங்கில் அதிக படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறேன். பள்ளியில் படித்தபோதே சினிமா ஆர்வம் இருந்தது. இசையில் ஈடுபட விரும்பினேன். நடிகையாகும் எண்ணமும் இருந்தது.


படித்து முடித்ததும் ‘லக்’ என்ற இந்தி படத்தில் அறிமுகமானேன். அந்த படம் சரியாக போகவில்லை. உடனே என்னை ராசி இல்லாத நடிகை என்று விமர்சித்தனர்.


ஒதுக்கவும் செய்தார்கள். அதுபற்றி கவலைப்படாமல் தொடர்ந்து நடித்தேன். இன்று முன்னணி கதாநாயகி இடத்துக்கு வந்து இருக்கிறேன். வருடத்துக்கு 340 நாட்கள் நடித்துக்கொண்டே இருக்கிறேன்.


சினிமாவில் கவர்ச்சி அவசியம். ஆனாலும் அந்த கவர்ச்சியை ஒரு ஆயுதம் போல் பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ரசிகர்கள் எதிர்பார்ப்பு முக்கியம். அவர்கள் எனது நடிப்பு பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறேன்.


அவர்கள் எதிர்பார்ப்புப்படியே கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடிக்கிறேன். சூர்யாவுடன் நடித்த ‘சி.3’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது. தற்போது எனது தந்தையுடன் இணைந்து ‘சபாஷ்நாயுடு’ என்ற படத்தில் நடித்து வருகிறேன்.”


இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.


0 comments:

Post a Comment