மகேஷ் பாபு - ஏ.ஆர்.முருகதாஸ் படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து
02 நவ,2016 - 16:33 IST
தமிழ், தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிசியாக இருக்கும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மூன்று மொழிகளிலும் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ஹிந்தியில் அகீரா படத்தை இயக்கிய முருகதாஸ் அப்படத்திற்கு பின்னர் டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் இணைந்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ரூ 100 கோடி செலவில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புகள், தற்போது ஐதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. நேற்றை படப்பிடிப்பின் போது படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக படக்குழுவினர் பெரும் காயங்கள் இன்றி தப்பியுள்ளனர். ஆனால் செட் முழுவதும் தீ பற்றி நாசமாகியுள்ளது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் பிரபல இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கின்றார். ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்கின்றார்.
0 comments:
Post a Comment