Wednesday, November 2, 2016

இளையராஜா இசையில் ரஜினி வில்லனும் நாயகியும் ஜோடியாம்


music director illayaraja


தென்னிந்திய ரசிகர்களை தன் இசையால் தாலாட்டி வருபவர் இளையராஜா.

ஆயிரம் படங்களை முடித்தபின்னும் அவரது இசைப் பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

தற்போது புதிதாக ஒரு இந்திப் படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார்.

பிரபல இந்தி இயக்குனர் இப்படத்தை பால்கி இயக்குகிறார்.

அமிதாப், தனுஷ் நடித்த ஷமிதாப் படத்தை இயக்கியவர் இவர்.

இப்படத்தில் அக்ஷய்குமார் மற்றும் ராதிகா ஆப்தே இணைந்து நடிக்கின்றனர்.

அக்ஷய்குமார் ரஜினி 2.ஓ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். ராதிகா ஆப்தே ரஜினியின் கபாலி படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment