‘பாடும் நிலா பாலு…’ இப்படி ஒரு அழகான சொல்லுக்கு சொந்தக்காரர் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
1966ஆம் ஆண்டு தெலுங்கு படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானார்.
அதன் பின்னர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முக காட்டி திரையுலகில் வலம் வந்தார்.
இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி மற்றும் கமலின் ஆஸ்தான பாடகராக இவர்தான் என்று சொன்னால் அது மிகையல்ல.
1000 பாடல்களை பாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றவர் இவர் கிட்டதட்ட 14 இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.
இந்நிலையில், எஸ்.பி.பிக்கு இந்தாண்டிற்கான (2016) சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
திரைத்துறையில் சிறந்த ஆளுமைக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது.
வருகிற நவம்பர் 20ஆம் தேதி தொடங்க உள்ள 47வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருது வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதற்கு முன் திரைத்துறையில் ரஜினிகாந்த், இளையராஜா உள்ளிட்டோரும் இந்த விருதை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment