கோல்மால் அகைன்-ல் பரிணிதி சோப்ரா
05 நவ,2016 - 17:49 IST
கோல்மால் படங்களின் வரிசையில் நான்காம் பாகமாக உருவாக இருக்கிறது ‛கோல்மால் அகைன்'. முந்தைய படங்களில் நடித்த அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ளனர். ரோகித் ஷெட்டி இயக்க உள்ளார். இப்படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக நடிகை பரிணிதி சோப்ரா நடிக்க உள்ளார். இந்தப்படத்தில் அஜய்க்கு ஏற்ற ஜோடியாக அவர் தான் இருப்பார் என்பதால் அவரை நடிக்க வைக்க ரோகித் எண்ணியுள்ளார். ஏற்கனவே பரிணிதி சோப்ராவும் ரோகித் படத்தில் நடிக்க ஆர்வமாய் இருப்பதால் அவர் நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறார். விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாக உள்ளது. அடுத்தாண்டு தீபாவளிக்கு கோல்மால் அகைன் படம் ரிலீஸாக உள்ளது.
0 comments:
Post a Comment