3 நிமிட காட்சிக்காக 32 நாள் காத்திருந்த இயக்குநர்
05 நவ,2016 - 16:47 IST
சமீபத்தில் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் 'புலி முருகன்' படத்தின் ஷூட்டிங்ஸ்பாட்டில் நடைபெற்ற சுவாரஸ்யங்களை தொகுத்தால் இரண்டு வால்யூம் கொண்ட புத்தகங்களாக போடலாம் என கூறியுள்ளார் படத்தின் இயக்குனர் வைசாக்.. அதில் அவர் சொன்ன ஒரு விஷயம் தான் பிரமிப்பின் உச்சமாக இருக்கிறது.. குறிப்பாக மோகன்லாலை அடுத்து, ரசிகர்களை ஈர்க்கும் பிரதான அம்சமான இன்னொரு கதாபாத்திரமான புலியை வைத்து அவர் படமாக்கிய அனுபவத்தை கேட்டால், அவர் எந்த அளவுக்கு பொறுமையின் சிகரம் என்பது புரியும்..
படத்தில் புலி இடம்பெறும் மொத்த காட்சிகளின் நேரம் வெறும் மூன்று நிமிடம் மட்டும் தானாம். அதைத்தான் படம் முழுவதும் ஆங்காங்கே பிரித்து பிரித்து பயன்படுத்தினாராம் இயக்குனர் வைசாக். ஆனால் இந்த மூன்று நிமிட காட்சிகளை புலியிடம் இருந்து இயல்பாக பெறுவதற்காக அவர் 32 நாட்கள் காத்திருக்க வேண்டி இருந்ததாம். தினசரி கேமராவை ஆன் பண்ணி வைத்துவிட்டு புலியின் முன்பாக வைசாக்கும் பீட்டர் ஹெயினும் காத்துக்கிடப்பார்களாம்..
ஆனால் பழகிய புலி என்பதாலோ அது இவர்கள் எதிர்பார்த்த ஆக்ரோஷ உணர்ச்சிகளை வெளிப்படுத்தவே இல்லையாம். கடைசியாக 32ஆம் நாள் ஏதேச்சையாக அந்த நிகழ்வு நடந்ததாம். இயக்குனர் வைசாக் அணிந்திருந்த தொப்பியின் நிறம் புலியை கோபப்படுத்தும் விதமாக இருக்க, ஆக்ரோஷமாக தனது கோபத்தை வெளிப்படுத்தியபடி பாய்ந்து வந்ததாம்.. அதை சரியாக பயன்பத்திக்கொண்டாராம் வைசாக். அதில் கிடைத்த மூன்று நிமிட காட்சிகள் தான் மொத்தப்படத்திற்கே பயன்பட்டதாம்.
0 comments:
Post a Comment