Tuesday, November 1, 2016

“சினிமாவை விட்டு விலகுவேன்” ; இயக்குனரை அதிரவைத்த மோகன்லால்..!


“சினிமாவை விட்டு விலகுவேன்” ; இயக்குனரை அதிரவைத்த மோகன்லால்..!



01 நவ,2016 - 09:55 IST






எழுத்தின் அளவு:








இந்த வருடம் கடந்த இரண்டு மாதங்களில் தொடர்ந்து இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்துவிட்டார் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால்.. ஆனால் அதற்கு முன் வரிசையாக தோல்விப்படங்கள் தான்.. 'த்ரிஷ்யம்' போல ஒரு ஹிட்டுக்காக காத்திருந்த மோகன்லாலின் மன நிலை இந்தப்படங்களின் படப்பிடிப்பு தளத்தில் நடிக்கும்போது என்னவாக இருந்தது தெரியுமா..? 'புலி முருகன்' படம் வெற்றிபெறாவிட்டால் தான் நடிப்பை விட்டே விலகிவிடலாம் என முடிவெடுத்திருந்தாராம் மோகன்லால்.

இந்த அதிர்ச்சி தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியின்போது சொன்னவர் 'புலி முருகன்' படத்தின் இயக்குனர் வைசாக் தான்.. இந்தப்படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்த தருணத்தில் அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்து, முகம் சுளிக்காமல் ஒத்துழைப்பு தந்த மோகன்லாலை பார்த்து மனம் உருகிப்போனாராம் இயக்குனர் வைசாக். அப்போது மோகன்லாலிடம் இந்தப்படம் ஓடாவிட்டால் தனது டைரக்சன் தொழிலை மூட்டைகட்டி வைத்துவிட்டு வேறு வேலைபார்க்க போய்விடுவேன் என்று சொன்னாராம் வைசாக்..

ஆனால் அதை கேட்ட மோகன்லால், “இந்தப்படம் நிச்சயம் ஓடும்.. அப்படி இது ஓடாவிட்டால், இனி நானும் ஹீரோ என்று சொல்லிக்கொண்டு இந்த இண்டஸ்ட்ரியில் இருப்பதில் அர்த்தமில்லை.. நானும் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிடுவேன்” என வைசாக்கிடம் சொன்னாராம். அந்த அளவுக்கு இந்தப்படத்தின் மீது மோகன்லால் வைத்திருந்த முழு நம்பிக்கையை பார்த்து வைசாக் உட்பட 'புலி முருகன்' யூனிட்டே வெற்றிக்காக தீயாய் வேலை செய்தார்களாம். இன்று படம் மலையாள சினிமாவின் நம்பர் ஒன் இடத்திற்கு வந்தது கண்டு, மோகன்லாலின் அன்றைய கணிப்பை எண்ணி பிரமித்து போய்விட்டதாக கூறியுள்ளார் இயக்குனர் வைசாக்.


0 comments:

Post a Comment