Wednesday, November 2, 2016

சிவகார்த்திகேயனை புகழ்ந்து, விஜய்-அஜித்-தனுஷ் ரசிகர்களை டென்ஷனாக்கிய சமந்தா

sivakarthikeyan samanthaரஜினிகாந்திற்கு பிறகு தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என் விவாதம் கிட்டதட்ட 10 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.


தலைவரை தவிர எவருக்கும் தகுதியில்லை என ரஜினி ரசிகர்கள் கற்பூரம் ஏந்தி சத்தியம் செய்து வருகின்றனர்.


ஆனால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் எங்கள் நடிகர்தான் என கூறிவருகின்றனர்.


அண்மைகாலமாக தனுஷ் ரசிகர்கள் அவரை இளைய சூப்பர்ஸ்டார் ரேஞ்சுக்கு கூறி வருகின்றனர்.


ஆனால் இவர்களை டென்ஷனாக்கும் வகையில் சிவகார்த்திகேயனை சூப்பர் ஸ்டார் என புகழ்ந்து இருக்கிறார் சமந்தா.


‘ரெமோ’ படத்தின் தெலுங்கு பதிப்பு இசை வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சமந்தா கலந்து கொண்டு பேசினார்.


அப்போது… “நான் நடிக்கத் தொடங்கியது முதல் ஒரு ஸ்டார் சூப்பர் ஸ்டாராக ஆவதைப் பார்த்தது இல்லை.

ஆனால் இப்போது சிவகார்த்திகேயனை அப்படி பார்க்கிறேன்.


அவர் எளிமையானவர், இனிமையானவர்” என்றார்.


பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தின் நாயகியாக சமந்தா ஒப்பந்தமாகியுள்ளது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

0 comments:

Post a Comment