Friday, March 31, 2017


நெடும்பா படத்தை திரையிட முடியாமல் தவிக்கும் ராஜ்குமார்



01 ஏப்,2017 - 10:09 IST






எழுத்தின் அளவு:








வெங்காயம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் சங்ககிரி ராஜ்குமார். அதன்பிறகு ஒண் என்ற படத்தை அவரே தயாரித்து, அவர் மட்டுமே நடித்தார். கின்னஸ் சாதனைக்காக எடுக்கப்பட்ட இந்தப் படமும் வெளிவரவில்லை. இந்த நிலையில் அவர் நெடும்பா என்ற படத்தை இயக்கி உள்ளார். இது மலைவாழ் மக்களின் கதை. இந்தப் படமும் வெளிவரவில்லை. இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:

நெடும்பா திரைப்படம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகிறது, முற்றிலும் புதுமுகங்கள் நடித்த ஒரு படத்தை அவ்வளவு எளிதாக திரையிட்டு விட முடியாது, அப்படி வெளியிட்டாலும் எந்த பயனும் இருக்காது. இந்நிலையில் படம் பார்த்த சேரன் வெங்காயம் திரைப்படத்தை விட பல மடங்கு சிறந்த படம் என சிலாகித்து இதை நானே வெளியிடுகிறேன் என சொல்லி ஒப்பபந்தம் செய்திருந்த நிலையில், சில சிக்கல்களால் ஒன்னறை ஆண்டுகள் கடந்து விட்டது.

அதன் பிறகு வேறு நிறுவனம் மூலமாக வெளியிடலாம் என அவர் முயற்சித்தபோது உயர்மதிப்பு நோட்டு பிரச்சனை உட்பட பல பிரச்சனைகளால் தொடர்ச்சியாக தள்ளி போய்கொண்டே இருந்தது. அதற்காக காத்திருந்த நாட்களை ஒன் படத்திற்காக செலவிட்டு சரி செய்து கொண்டிருந்தேன். நெடும்பா படத்திற்கான உழைப்பு மிகக்கடுமையானது, 500 ஆண்டுகளாக வெளியுலக மக்களை பார்க்காத ஒரு இனம் பற்றிய கதை. தென்னிந்தியாவிலுள்ள பெரும்பாலான மலை கிராமங்களுக்கு பயணித்து, ஆயிரக்கணக்கான பழங்குடி மக்களை சந்தித்து அவர்களது அனுபவங்களை கேட்டு எழுதப்பட்ட கதை திரைக்கதை. கிட்டத்தட்ட 300 பேரின் கடின உழைப்பு.

இந்த தாமதத்திற்க்கான முழு காரணம் நான் தான், ஒரு தயாரிப்பாளராக இருப்பதற்கு எந்தவித தகுதியும் இல்லாத நான் இதை தயாரித்திருக்க கூடாது. கருத்து, கதையமைப்பு, காட்சியமைப்பு என சிந்தித்து கொண்டிருந்த என்னை கடன், வட்டி, தவணை என சிந்திக்க வைத்து சிதைத்துக்கொண்டிருக்கிறது இந்தப்படம். இது நான் தயாரிக்கும் கடைசி படம் என எண்ணும்போது ஒரு விரக்தி ஏற்படுகிறது.

சமீபத்தில் இதே களம் சார்ந்து எடுக்கப்பட்டிருக்கும் இரண்டு படங்களின் (கடம்பன், வனமகன்) ட்ரைலர் வெளியிடப்பட்டிருக்கிறது. பெரிய நடிகர்கள், பெரிய பட்ஜெட், பெரிய விளம்பரம் செய்யபடும் அந்த படங்கள் இரண்டு வருடமாக போராடிக்கொண்டிருக்கும் நெடும்பாவிற்கு முன்னதாகக்கூட வெளியிடப்பட வாய்ப்பிருக்கிறது. அதற்கு பிறகு நெடும்பா வருமேயானால் “இதே மாதிரி ஏற்கெனவே ரெண்டு படம் வந்திருச்சு” என்றோ அல்லது “அந்த படத்த பாத்து காப்பி அடிச்சுருக்கான்” என்றோ நீங்கள் கமெண்ட் அடித்து விட்டு போகும் தருவாயில், நான் ஊர் பக்கம் ஏதேனும் ஒரு காட்டு வேலை செய்து கொண்டிருப்பேன். என்கிறார் ராஜ்குமார்.



vijay antony and kiruthika udhayanidhiஎமன், சைத்தான் ஆகிய படங்கள் விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியானது.


இதனையடுத்து புதுப்படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இப்படத்தை உதயநிதியின் மனைவியும் வணக்கம் சென்னை படத்தின் இயக்குநருமான கிருத்திகா இயக்கவிருக்கிறார்.

இத்தகவலை இப்படத்தை தயாரிக்கும் பாத்திமா விஜய் ஆண்டனியே உறுதிப்படுத்தியுள்ளார்.






டோரா விமர்சனம்

நடிகர்கள் : நயன்தாரா, தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன், சுலிகுமார் மற்றும் பலர்.
இயக்கம் : தாஸ் ராமசாமி
இசை : விவேக் சிவா மெர்வின்
ஒளிப்பதிவாளர் : தினேஷ் கிருஷ்ணன்
எடிட்டர்: கோபி கிருஷ்ணா
பி.ஆர்.ஓ.: நிகில்
தயாரிப்பு : சற்குணம்


Dora movie working stills


கதைக்களம்…


நயன்தாராவின் அப்பா தம்பி ராமையா.


இவர்கள் இருவரும் ஒரு கால் டாக்ஸி நிறுவனத்தை ஆரம்பிக்க செகண்ட் ஹேண்டில் ஒரு பழைய காரை வாங்குகின்றனர்.


ஆனால் அந்த கார், ஒருமுறை தானே இயங்கி ஒருவனை கொல்கிறது.


இதற்கான விசாரணையில் இறங்குகிறார் ஹரிஷ் உத்தமன்.


ஆனால் சரியான ஆதாரம் இல்லாமல் இவர் குழம்பி நிற்கிறார்.


அந்த கார் இன்னும் சிலரை கொல்ல நினைக்கிறது. அதற்கு என்ன காரணம்? அப்படியென்றால் அந்த காருக்குள் இருக்கும் ஆன்மா யார்?


அது நயன்தாராவின் காரில் வரக் என்ன காரணம்? என்ன தொடர்பு? என்ற பல திருப்பங்களுக்கு பதில் சொல்கிறாள் டோரா.
dora stills


கதாபாத்திரங்கள்…


கதை தான் ஹீரோ. நான்தான் ஹீரோயின் என அபார நம்பிக்கையில் இறங்கி அடிக்கிறார் நயன்தாரா.


அப்பா தம்பி ராமையாவிடம் கொஞ்சுவதும், பேய் காரைப் பார்த்து பயப்படுவதும், பின்னர் வில்லனைக் கொல்வதும் என பல கோணங்களில் அசத்துகிறார் நயன்தாரா.


தம்பி ராமையாவும் தன் பங்கில் குறைவைக்கவில்லை. ஹரிஷ் உத்தமன் வரும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.


தென்னிந்தியாவில் வடநாட்டு பையன்கள் வந்து, காட்டும் கைவரிசைகளை அப்பட்டமாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.


dora nayan thambi ramaiaya


படம் பற்றிய அலசல்…


கதை ஹீரோ என்பதால், நாய், பேய், கார் என அனைத்தையும் நயன்தாராவுக்கு போட்டியாக களம் இறக்கிவிட்டுள்ளார் டைரக்டர்.


காரிடம் நயன்தாரா பேசும் காட்சிகள், போலீஸிடம் இருந்து கார் தப்பிக்கும் காட்சிகள் நிச்சயம் குழந்தைகளை கவரும்.


காரின் நிழலாக வரும் நாய் மற்றும் அந்த கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பு சேர்க்கிறது.


ப்ளாஷ்பேக் காட்சியில் காருக்கும் நயன்தாராவுக்கும் என்ன சம்பந்தம்? என்ற காட்சிகளும், பாலியல் கொடுமை காட்சிகளும் படத்திற்கு அழுத்தம் சேர்க்கின்றன.


டோராவை மையப்படுத்தி ஒரு பாடல். நான் ஈ படத்தில் உள்ள பாடலை நினைவுப்படுத்துகிறது.


பின்னணி இசை த்ரில் சீன்களில் திகைக்க வைக்கிறது.


தாஸ் ராமசாமி படத்தை கையாண்ட விதம் அருமை என்றாலும் பழிவாங்கும் கதையில் இன்னும் ட்விஸ்ட் சேர்த்திருந்தால், டாப் கியரில் படம் எகிறியிருக்கும்.


டோரா… குழந்தைகளுடன் ரசிக்கலாம்





  • Tags:

  • Dora Kids, Dora movie, Dora movie review rating, Dora Nayanthara, டோரா கதை, டோரா குட்டீஸ் எப்படி?, டோரா டிவி படம், டோரா திரைப்பார்வை, டோரா நயன்தாரா, டோரா விமர்சனம், டோரா ஹரிஸ் உத்தமன்

உலகம் முழுக்க சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ரசிகர்கள் ஏராளமாக இருப்பது நாம் அறிந்ததே. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பானில் ரஜினிகாந்துக்கு பயங்கரமான ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ரஜினியின் ‘கபாலி’ படம் மலேசியாவில் நடைபெற்ற போது, அங்கு தங்கியிருந்த ஹோட்டல், படப்பிடிப்பு நடந்த இடங்கள் என ரசிகர்கள் அவரை சூழ்ந்து இருந்தனர்.

இது ஒருபுறம் இருக்க மலேசியாவின் பிரமரான நஜீப் ரஸாக் மற்றும் அவரது குடும்பத்தினர் ரஜினியின் தீவிர ரசிகர்களாம். இந்நிலையில், இந்தியாவில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வருகை தரும் மலேசியா பிரதமர் நஜீப் ரஸாக், பிரதமர் மோடியை சந்திப்பதற்கு முன் ரஜினியை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்தது.

அதன்படி, இன்று சென்னை வந்த மலேசியா பிரதமர் நஜீப் ரஸாக், ரஜினியை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார். அப்போது, இருவரும் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர். பின்னர், ரஜினி செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘கபாலி’ படப்பிடிப்பின்போது மலேசிய அரசு நல்ல ஒத்துழைப்பு வழங்கியது. அதனடிப்படையில், என்னுடைய அழைப்பை ஏற்று என்னை சந்திக்க வந்த மலேசியா பிரதமருக்கு நன்றி. மலாக்கா நகரின் சுற்றுலா தூதராக என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படும் செய்திகள் அனைத்தும் வதந்திதான்.

ரசிகர்கள் மன்ற கூட்டம் கூடுவது அரசியல் பிரவேசத்திற்கான முதல் அடி என்று கூறுவதெல்லாம் பொய்யானது. ரசிகர்களுடன் நான் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்வு ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 16 வரை நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வில் நான் கலந்துகொள்ளவிருக்கிறேன். அதற்காகத்தான் ஏப்ரல் 2-ந் தேதி ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறவிருக்கிறது. ‘2.ஓ’ படத்தில் என்னுடைய பகுதிகளுக்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றனர். வரும் தீபாவளிக்கு படம் வெளிவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒரே கல்லூரியில் படித்து வரும் விஜய் சேதுபதி – மடோனா செபாஸ்டியன் இருவரும் தொடக்கம் முதலே காதலித்து வருகின்றனர். காதலுடன் சந்தோஷமாக தனது கல்லூரி வாழ்க்கையை அனுபவித்து வரும் இந்த ஜோடி படிப்பை முடிக்கும் தருவாயில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து விடுகின்றனர். ஊடகத்துறையின் மீது அதீத பிரியமுள்ள விஜய் சேதுபதிக்கு, சுமார் 2 வருடங்களுக்கு பிறகு, அக்‌ஷய் சய்கல் நடத்தி வரும் பிரபல தொலைக்காட்சியில் வேலை கிடைக்கிறது. அதே நிறுவனத்தில்தான் மடோனாவும் வேலை செய்து வருகிறார்.

அது ஒருபுறம் இருக்க, அரசியல்வாதியாக வரும் போஸ் வெங்கட்டுக்கு சொந்தமான தொழிற்சாலை ஒன்றில் இருந்து வெளியேறும் கழிவு நீர், குடிநீர் ஏரி ஒன்றில் கலந்து மாசு ஏற்படுத்துகிறது. இந்நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சமூக அமைப்பு ஒன்று போராட்டம் நடத்துகிறது. இதில் விக்ராந்த் மற்றும் அவரது தோழி உள்ளிட்டோர் போஸ் வெங்கட்டுக்கு எதிராக தீவிர போராட்டத்தில் இறங்குகின்றனர்.

இதனால் கடுப்பாகும் போஸ் வெங்கட் அந்த அமைப்பின் போராட்டத்தை தடுக்கும் விதமாக, தனது ஆட்களை விட்டு, விக்ராந்தின் தோழியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்க, அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். இந்த தகவல் தனது தோழியான மடோனாவிற்கு தெரிய வர அந்த பெண்ணை பார்க்க செல்லும் மடோனா, விஜய் சேதுபதி அவளிடம் வீடியோ பேட்டி ஒன்றை எடுத்து வருகிறார்கள்.

இதயைடுத்து தான் பணிபுரியும் தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சியில், அந்த வீடியோவை வெளியிடுகின்றனர். இதனால் கடுப்பாகும் போஸ் வெங்கட் அந்த தொலைக்காட்சியின் நிறுவனரான அக்‌ஷதீப் சய்கலை தொடர்பு கொள்ள இருவருக்கும் இடையே சில ஒப்பந்தங்கள் பேசி அந்த செய்தியை மாற்றி வெளியிடுகின்றனர்.

இதனையடுத்து, முதல்வன் பட பாணியில் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது. இதில் விஜய் சேதுபதி, போஸ் வெங்கட்டை பேட்டி எடுக்கிறார். அந்த பேட்டியில் அவருக்கு எதிரான கேள்விகளை கேட்கக் கூடாது என்றும், அவரது புகழ் பாடும் பேட்டியாக எடுக்க மேலிடம் உத்தரவு போடுகிறது. இந்நிலையில், அந்த பேட்டியை நேரிலையில் பார்த்த, விக்ராந்த், மற்றும் பாதிக்கப்பட்ட பெண் விஜய் சேதுபதியை தொடர்பு கொண்டு கதற, ஏற்கனவே நிர்வாகத்தின் மீது கடுப்பில் இருக்கும் விஜய் சேதுபதி, கோபத்தின் உச்சத்திற்கு செல்ல போஸ் வெங்கட்டிடம் சரமாரியாக கேள்விகளை பொறிந்து தள்ளுகிறார்.

இதனையடுத்து அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப தொலைக்காட்சி நிர்வாகம் மறுப்பு தெரிவிக்கிறது. இதனையடுத்து, தனது வேலையை உதறிதள்ளும் விஜய் சேதுபதி, எந்த ஒரு பிரச்சனையையும் துணிச்சலுடன் சந்திக்கும் டி.ராஜேந்தர் நடத்தி வரும் ஒரு சிறிய சேனலில் சேருகிறார்.

அந்த சேனல் மூலம் போஸ் வெங்கட், அக்‌ஷதீப் செய்யும் தவறுகளை மக்களிடம் வெளிச்சம் போட்டு காட்டுகிறார். இதையடுத்து அவர்களை, தனது கவண் மூலம் எப்படி வீழ்த்தினர்? என்பது கவணின் மீதிக்கதை.

வெகுநாட்களுக்கு பிறகு திரையில் காட்சியளித்துள்ள டி.ராஜேந்தர் தனக்கே உரிய பாணியில் கலக்கி இருக்கிறார். அவரது வசனங்களும், செய்கைகளும் பார்ப்பவர்களுக்கு உணர்ச்சியை தூண்டுவதுடன், ஆர்வத்தையும் கூட்டுகிறது. முதல்பாதியில் அவருக்கு குறைவான காட்சிகளே இருந்தாலும், இரண்டாவது பாதியில் திரையை கலக்கியதுடன் தான் வரும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.

வெகுநாட்களுக்கு பிறகு திரையில் தோன்றினாலும், முந்தைய படங்களில் வருவது போல இப்படத்திலும் உணர்ச்சிகரமாக நடித்திருக்கிறார். குறிப்பாக அவரது காட்சிகளுக்கு விசில் பறக்கிறது.

இப்படத்தில் விஜய் சேதுபதி கனமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். எப்போதும் போல அவருக்கே உரித்தான ஸ்டைலில், நடிப்பில் பாராட்டு பெறுகிறார். அவர் பேசும் வசனங்கள் ரசிக்கும்படியும், சிந்திக்கும்படியும் இருக்கிறது. கல்லூரி மாணவர், தொலைக்காட்சி நிருபர் மற்றும் சமூக ஆர்வலர் என மிரட்டியிருக்கிறார். குறிப்பாக பத்திரிக்கை நிருபராக இவரது தோற்றம் ரசிக்க வைக்கிறது.

மீடியாவில் வேலை செய்யும் பெண்ணாக வரும் மடோனா செபாஸ்டியனும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கனமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் மடோனா நடிப்பில் ஒருபடி மேல சென்றுள்ளார். இப்படத்தில் அவரது நடிப்பு பேசுப்படியாக இருக்கிறது. விக்ராந்த் தனக்குரிய கதாபாத்திரத்தை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார்.

இப்படத்தில் அவரது கதாபாத்திரம் பேசும்படியாக உள்ளது. மேலும் அவரது கோபமும், உணர்ச்சியும் மக்களை உணர்ச்சிவசப்பட வைக்கும்படி உள்ளது. குறைவான நேரங்களில் வந்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் நின்றிருக்கிறார்.

அயன் படத்திற்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் தலைகாட்டியுள்ள அக்‌ஷதீப் சய்கல் இப்படத்திலும் மிரட்டி இருக்கிறார். தொலைக்காட்சி நிறுவனராகவும், வில்லனாகவும் வலம் வரும் அவருக்கு, அந்த வேடம் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. மேலும் போஸ் வெங்கட் அரசியல்வாதியாகவே வாழ்ந்திருக்கிறார். அரசியல் ரவுடியாக தனது மற்றொரு முகத்தை காட்டியிருப்பது காட்சிகளோடு ஒன்றியிருக்கிறது.

சில மீடியாக்களில் தவறு நடக்கிறது என்பதை சுட்டிக்காட்டும் விதமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார். அதேசமயம் சமூகத்தின் மீது அக்கறை உள்ளவர்கள், உண்மைச் செய்திகளை கொடுத்து, அதே மீடியா மூலமே தவறுகளை சுட்டிக்காட்ட முடியும் என்பதையும், அதற்கு விடை காணமுடியும் என்பதையும் விளக்கியிருக்கும் கே.வி.ஆனந்தின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

மேலும் வசனங்கள் அனைத்தும் ரசிக்கும்படியும், சிந்திக்கும்படியும் இருப்பது படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. கோ படத்திற்கு பிறகு, அவருக்கே உரித்தான பாணியில் திரைக்கதை அமைத்துள்ளது சிறப்பு. அதற்காக கபிலன் வைரமுத்துக்கு ஒரு பாராட்டுக்களை தெரிவிக்கலாம். விக்ராந்த், டி.ஆர். வரும் காட்சிகளை உணர்ச்சிகரமாக அமைத்தது படத்திற்கு மேலும் பலம்.

தனக்குரிய தனித்துவமான இசையில் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் பாடல்கள் சரியான இடைவெளியில் அமைந்துள்ளது. குறிப்பாக “ஆக்ஸிஜன் தந்தாலே”, “ஹேப்பி ஹேப்பி நியூ இயர்” உள்ளிட்ட பாடல்கள் ரசிக்கும்படி உள்ளது. பின்னணி இசை படத்திற்கு மேலும் பலத்தை கூட்டியிருக்கிறது.

திரையில் ரசிக்க வைக்கும்படியான ஒளிப்பதிவை கொடுத்திருக்கும் அபிநந்தன் ராமானுஜத்தின் முயற்சிகளுக்கு பலன் கிடைத்துள்ளது. சிறப்பாக காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

மொத்தத்தில் `கவண்’ குறி தப்பாது.


கடைசி நேரத்தில் சிவகுமாருக்கு கைநழுவிய தேசிய விருது



31 மார்,2017 - 14:26 IST






எழுத்தின் அளவு:








மார்க்கண்டேயர் சிவகுமார் 100 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்தவர். அவர் நடிப்பில் ஜொலித்த படங்கள் ஏராளம். ரோசாப்பூ ரவிக்கைகாரி, வண்டிச்சக்கரம், அவன் அவள் அது, அக்னி சாட்சி படங்களுக்காக பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார். ஆனால் அவருக்கு கிடைக்க இருந்த தேசிய விருது சில உள்ளடி வேலைகளால் கையழுவிப்போனது.

1991ம் ஆண்டு வெளிவந்த படம் மறுபக்கம்.

உச்சிவெயில் என்ற தலைப்பில் இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாவலை கே.எஸ்.சேதுமாதவன் படமாக இயக்கினார். திரைக்கதை வசனத்தை இந்திரா பார்த்தசாரதியே எழுதினார். சிவகுமாருடன் ஜெயபாரதி, ராதா நடித்திருந்தார்கள். எல்.வைத்தியநாதன் இசை அமைத்திருந்தார். டி.வசந்தகுமார் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

எந்த தவறும் செய்யாத மனைவியை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் ஒருவன் பிற்காலத்தில் தன் தவறுகளை உணர்ந்து முதல் மனைவிடம் பாவமன்னிப்பு கேட்டு நிற்பதாக கதை. சிவகுமாரின் முதல் மனைவியாக ஜெயபாரதியும், இரண்டாவது மனைவியாக ராதாவும் நடித்திருந்தார்கள். இந்தபடம் அந்த ஆண்டு இந்தியாவில் வெளிவந்த படங்களிலேயே சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு தங்கத்தாமரை விருதை பெற்றது. சிறந்த திரைக்கதைக்கான விருது இயக்குனர் சேதுமாதவனுக்கு கிடைத்தது. சிறந்த நடிகைக்கான சிறப்பு விருது ஜெயபாரதிக்கு கிடைத்து.

அந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான விருது பட்டியலில் சிவகுமார் முதல் இடத்தில் இருந்தார். முதல் நாள் இரவு வரை சிவகுமாருக்குத்தான் தேசிய விருது என்ற செய்திகள் பரவியிருந்தது. ஆனால் மறுநாள் காலை அக்னிபாத் படத்தில் நடித்த அமிதாப்பச்சனுக்கு அதேசிய விருது அறிவிக்கப்பட்டது. தேர்வுகுழுவில் அதிக அளவில் இடம்பெற்றிருந்த வடநாட்டுக்காரர்கள். தென்னாட்டுக்காரான அதுவும் குறிப்பாக தமிழரான சிவகுமாரை புறந்தள்ளிவிட்டனர்.



90 சதவிகிதம் செட்டுக்குள் படமாக்கப்பட்ட பாகுபலி-2



31 மார்,2017 - 17:42 IST






எழுத்தின் அளவு:








எஸ்.எஸ்.ராஜமௌலியின் 'பாகுபலி-2' ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி ரிலீசாகிறது. இதுநாள்வரை படத்தைப் பற்றி வாய் திறக்காத டெக்னீஷியன்கள், தற்போது படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிவிட்டதால் 'பாகுபலி-2' குறித்து தகவல்களை பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த படத்தில் கலை இயக்குனராக பணியாற்றியிருக்கும் சாபு சிரில் சொன்ன தகவல்கள் மூலம் பாகுபலி-2 பற்றிய சில விஷயங்கள் வெளியே தெரிய வந்துள்ளன.

''பாகுபலி' முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் நிறைய சர்ப்ரைஸ்கள் உண்டு. இரண்டாம் பாகம் படு த்ரில்லிங்காகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும். அதே நேரம் விஷுவல் 'ட்ரீட்'டாகவும் இருக்கும். முதல் பாகத்தில் அதிகமாக கிராஃபிக்ஸ் வேலைகள் இடம் பெற்றிருந்தது. இரண்டாம் பாகத்தில் கிராபிக்ஸ் குறைவு. மிகப் பிரம்மாண்டமான செட்களுக்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டுள்ளது.

'பாகுபலி-2' வின் கிளைமேக்ஸை ஆந்திராவிலுள்ள மிகப் பெரிய ஒரு கல் குவாரியில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த கிளைமேக்ஸை முதலில் சம்பல் ஏரியாவில் படம் பிடிக்க திட்டமிட்டிருந்தோம். அப்போது அங்கிருந்த சூழ்நிலை படப்பிடிப்பு ஏற்ற மாதிரியாக அமையாததால் கல் குவாரியை தேர்வு செய்தோம். படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் தான் நடந்திருக்கிறது!

காடு சம்பந்தப்பட்ட காட்சிகளை கேரளாவிலுள்ள கண்ணவம் காட்டுக்குள் படமாக்கியிருக்கிறோம். ஆந்திராவிலும் காட்டுப் பகுதிகள் இருக்கின்றன என்றாலும் கேரளாவிலுள்ள காடு மாதிரி அடர்த்தியாகவும், பெரிய மரங்கள் நிறைந்த காடு மாதிரியும் இருக்காது என்பதால் கேரளா காடுகளை தேர்வு செய்தோம்'' என்று 'பாகுபலி-2 படம் பற்றி வாய் திறந்திருக்கிறார் சாபு சிரில்!



ஒருவாரத்தில் ரூ.22.68 கோடி அள்ளிய ‛பில்வுரி'



31 மார்,2017 - 17:05 IST






எழுத்தின் அளவு:








தில்ஜித் - அனுஷ்கா சர்மா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‛பில்வுரி'. ரொமான்ட்டிக் உடன் பேயையும் இணைந்து கலகலப்பாக கொடுத்தார் இயக்குநர் அன்சாய் லால். இப்படத்தில் ஹீரோயினாக நடித்தது மட்டுமின்றி, தயாரிப்பாளராகவும் இருந்தார் அனுஷ்கா. சுமார் ரூ.21 கோடி பட்ஜெட்டில் உருவான பில்வுரி படம், கடந்தவாரம் வெள்ளிக்கிழமை வெளியானது. வெளியான ஒரு வாரத்தில் ரூ.22.68 கோடி வசூலித்துள்ளது. ஏற்கனவே சாட்டிலைட் மூலம் ரூ.12 கோடி பெற்றுள்ளது. ஆக, பில்வுரி படம் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு லாபத்தை தந்துள்ளது என்கிறார்கள்