12 கிலோ எடை குறைத்த ஜூனியர் என்.டி.ஆர்
12 மார்,2017 - 14:02 IST
ஜனதா கேரேஜ் படத்திற்கு பின்னர் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ஜெய் லவகுச எனும் ஆக்ஷன் படத்தை இயக்குனர் ரவிந்திர பாபி இயக்குகின்றார். ஜூனியர் என்.டி.ஆரின் சகோதரரும் நடிகருமான கல்யாண் ராம் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்து அடுத்த கட்ட படப்பிடிப்புகள் துவங்கவுள்ளன. மார்ச் 15ல் துவங்கும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ஜூனியர் என்.டி.ஆர் கலந்து கொள்ளவுள்ளாராம். வில்லன் வேடம் உட்பட இப்படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர் இதற்காக உடல் எடையை 12 கிலோ குறைத்துள்ளாராம். கதாபாத்திரங்களில் வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக தீவிர உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு வாயிலாக உடல் எடையை குறைத்துள்ளார் ஜூனியர் என்.டி.ஆர். ராக்ஷி கண்ணா மற்றும் மலையாள நடிகை நிவேதா தாமஸ் நாயகிகளாக நடிக்கும் இப்படத்தை ஆகஸ்ட் 11ல் திரையிட படக்குழு தீர்மானித்துள்ளது.
0 comments:
Post a Comment