Sunday, March 12, 2017

பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய ராக்கி சாவந்த் வீடியோ ?


பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய ராக்கி சாவந்த் வீடியோ ?



12 மார்,2017 - 12:07 IST






எழுத்தின் அளவு:








தமிழ்த் திரையுலகம் கடந்த வாரம் பின்னணி பாடகி சுசித்ரா வெளியிட்டதாகச் சொல்லப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களால் பரபரப்பாக இருந்தது. பிரபல நடிகர், நடிகைகள் சுசித்ராவை சபிக்கும் அளவிற்கு இருந்த அந்த விவகாரம் அப்படியே அமுங்கிப் போனது. சுசித்ரா தற்போது தொடர்பு எல்லைகளுக்கு அப்பால் இருப்பதாகச் சொல்கிறார்கள். சில முன்னணி நடிகர், நடிகைகள் தலையிட்டதன் பேரில் சுசித்ரா மிரட்டப்பட்டு, சென்னையை விட்டு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கோலிவுட்டில் தகவல்கள் உலா வருகின்றன.

கோலிவுட்டில் இருந்த கடந்த வார வீடியோ பரபரப்பு இந்த வாரம் பாலிவுட்டிற்கு தொற்றிக் கொண்டது. பிரபல கவர்ச்சி நடிகையான ராக்கி சாவந்த் உடை மாற்றும் வீடியோ என்று சொல்லப்படும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ராக்கி சாவந்தும் 'அது நானில்லை, என்னைப் போலவே இருக்கும் ஒருவர்,' என்று வழக்கம் போல மறுத்திருக்கிறார். அதே சமயம், 'அது நானா இல்லையா என்றும் தெரியவில்லை. என்ன நினைப்பது என்றும் தெரியவில்லை. இருந்தாலும் இந்த விவகாரத்தை என் பின்னால் வைத்துக் கொள்கிறேன்,” என்று குழப்பியுள்ளார்.

பரபரப்பான ஏதாவது புகைப்படமோ, வீடியோவா வந்தால்தான் மீடியாக்களில் நம்மைப் பற்றி பேச்சு வரும் என சம்பந்தப்பட்ட சில நடிகர், நடிகைகளுக்கு சில வருடங்களுக்கு ஆலோசனை சொல்லி சில மும்பை ஏஜென்சிகள் செயல்பட்டன என்ற குற்றச்சாட்டு இருந்தது. அதே போல இப்போது ஏன் நடக்கக் கூடாது என்றும் சிலர் சந்தேகத்தை எழுப்புகிறார்கள்.


0 comments:

Post a Comment