அதிதிமேனனை கவர்ந்த ஏ.எல்.விஜய்!
12 மார்,2017 - 10:09 IST
மலையாளத்தில் இருந்து வந்து தமிழ்ப் படங்களில் நடித்து வருபவர் அதிதிமேனன். பட்டதாரி படத்தை அடுத்து சந்தனத்தேவனில் நடித்து வரும் இவர் சில தமிழ்ப் படங்களைத்தான் பார்த்திருக்கிறாராம். அதில் ஏ.எல்.விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் குறிப்பிடத்தக்க படமாம். அந்த படத்தை பார்த்து சுதந்திரத்திற்கு முன்பு மதராசப்பட்டினம் என்கிற சென்னை இருந்த தோற்றத்தைக்கண்டு வியந்து போனாராம். அதோடு, அந்த படத்தின் மேக்கிங்கைப்பார்த்தபோது கண்டிப்பாக இந்த படத்தை ஒரு சீனியர் டைரக்டர்தான் இயக்கியிருக்க வேண்டும் என்று நினைத்தாராம் அதிதிமேனன்.
ஆனால், அவர் பட்டதாரி படத்தில் நடிக்க சென்னை வந்திருந்தபோதுதான் ஒருமுறை ஏ.எல்.விஜய்யை பார்த்தாராம். அப்போது இவ்வளவு இளமையான டைரக்டரா மதராசப்பட்டினம் படத்தை அத்தனை மெச்சூரிட்டியாக இயக்கியிருந்தார் என்று ஆச்சர்யமடைந்தாராம். அதன்பிறகு அவர் இயக்கிய மற்ற படங்களையும் பார்த்து ரசித்த அதிதிமேனனுக்கு, ஏ.எல்.விஜய் மாதிரியான டைரக்டர்களின் படங்களில் எதிர்காலத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டிருக்கிறதாம். அதனால் சந்தனத்தேவன் படத்தில் நடித்து முடித்ததும் அவரைப்போன்ற டைரக்டர்களிடம் நடிக்க சான்ஸ் கேட்கவும் முடிவெடுத்திருக்கிறாராம் அதிதிமேனன்.
0 comments:
Post a Comment