விஜயசேதுபதி-ஜி.வி.பிரகாஷ் ரூட்டை பிடிக்கும் விஜய் ஆண்டனி!
12 மார்,2017 - 09:45 IST
நான் படம் தொடங்கி சைத்தான் படம் வரை தனது ஒவ்வொரு படத்திலும் அதிக ஈடுபாடு காட்டி வந்தார் விஜய் ஆண்டனி. குறிப்பாக, நடிப்பது, இசைய மைப்பது மட்டுமின்றி, படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகளிலும் அதிக ஆர்வம் காட்டி வந்தார். ஆனால் எமன் படத்தில் நடிப்பது, இசையமைப்பதோடு நிறுத்திக்கொண்டார். போஸ்ட் புரொடக்சன்ஸ் வேலைகளில் விஜய்ஆண்டனியின் கவனம் செல்லவில்லை.
அதேபோல், இனிமேல் ஒரு படத்தில் நடித்து முடித்ததும், தான் நடிக் கவேண்டிய அடுத்த படத்திற்காக தன்னை தயார்படுத்தப்போகிறாராம் விஜய் ஆண்டனி. மேலும், இதுவரை ஒரு படத்தில் நடித்த பிறகே அடுத்த படம் என்று நடித்து வந்த விஜய் ஆண்டனி, இனிமேல் விஜயசேதுபதி, ஜி.வி.பிர காஷ் பாணியில் வருடத்திற்கு மூன்று படங்கள் வரை நடிக்க திட்டமிட்டிருக்கிறார். அதனால் விஜய் ஆண்டனியின் கதை கேட்கும் இலாகா முன்பை விட தற்போது அதிவேகமாக செயல்படத்தொடங்கியிருக்கிறது
Advertisement
0 comments:
Post a Comment