தளிப்போனது சர்கார்-3 ரிலீஸ்
23 மார்,2017 - 14:01 IST
சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் சர்கார் படத்தின் மூன்றாம் பாகமாக தற்போது சர்கார்-3 உருவாகியுள்ளது. அமிதாப், ஜாக்கி ஷெரப், அமித் சாத், யாமி கவுதம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏற்கனவே கதை பிரச்னை தொடர்பாக இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இந்நிலையில் சர்கார்-3 மீண்டும் தள்ளிபோய் உள்ளது.
இதுகுறித்து சர்கார்-3 படக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது... ‛‛போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகள் முடியாததால் ரிலீஸ் பாதிக்கப்பட்டுள்ளது. அமிதாப், ராம் கோபால் மற்றும் ஈராஸ் நிறுவனத்துடன் கலந்து பேசி அனைவரும் ஒருமித்த முடிவாக படத்தை வருகிற மே 17-ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளோம்'' என்று கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment