50 நாட்களைக் கடந்த சிரஞ்சீவியின் 'கைதி நம்பர் 150'
02 மார்,2017 - 14:56 IST
டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஒன்பது வருட இடைவெளிக்கு பின்னர் நடித்த திரைப்படமான ‛கைதி நம்பர் 150' பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ல் திரைக்கு வந்தது. இயக்குனர் விவி விநாயக் இயக்கத்தில் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தயாரித்த இப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள 53 திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்தார். இத்திரைப்படம் ரூ 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து டோலிவுட்டில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. சிரஞ்சீவியின் 150வது திரைப்படமான இப்படம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த கத்தி படத்தின் ரீமேக் ஆகும். ராம் சரணின் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றுள்ள மகிழ்ச்சியை டுவிட்டரில் அவர் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
0 comments:
Post a Comment