Wednesday, March 22, 2017

‘விஜய் ஒண்ணு செஞ்சா; விஷால் ஒண்ணு செய்வாரு..’ – தாணு

Kalaipuli-S-Thanuஏப்ரல் 2ஆம் தேதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் நடைபெற உள்ளது.


இதில் முன்னேற்ற அணி சார்பாக தலைவர் பதவிக்கு ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.


இவரை ஆதரித்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது…


நடிகர் சங்கத்தில் பதவிக்கு வந்தபின்பு விஷால் எதையும் செய்யவில்லை.


கல்யாணமும் பண்ணல. கட்டிடமும் கட்டல.


இவரு ஆர்யா எல்லாம் சேர்ந்து ஒரு படம் நடிச்சி, கட்டிடம் கட்ட போறேன்னு சொன்னாங்க. என்ன ஆச்சு?


எல்லாம் அரைகுறையாக பேசுறாரு. இவரை வச்சு படம் எடுத்த தயாரிப்பாளர்களை இவரு காப்பாத்தல.


ஆனா மத்த தயாரிப்பாளர்கள காப்பாத்த போறேன்னு சொல்றாரு.


இவர் சூட்டிங்கில் இருக்கும்போது ஒரு தயாரிப்பாளருக்கு பிரச்சினை என்றால் ஓடிவருவாரா? அப்படி வந்தால், இவர் நடிக்கும் படத்தின் தயாரிப்பாளர் பாதிக்கப்பட மாட்டாரா?


குதிரையிலும் ஒட்டகத்திலும் ஒரே நேரத்தில் பயணம் செய்ய ஆசைப்படுகிறார்.


அவர் (விஜய்) புலி வச்சா இவர் பாயும் புலி டைட்டில் வைக்கிறார்.


அவர் இளையதளபதி என்றால், இவர் புரட்சி தளபதி என்கிறார். இவர் என்ன புரட்சி செய்துவிட்டார்.


‘பாயும்புலி’ பட சிக்கல் வந்த போது விஷால் போனை ஆப் செய்து பதுங்கி விட்டார்.


பிரச்சினை வந்தால் பதுங்கும் நீயெல்லாம் பாயும் புலியா?


ஒரு முறை 50 லட்ச ரூபாய் பிரச்சினையில் என்னிடம் வந்து பவ்யமாகக் கெஞ்சினார்.


சங்கத்தில் சிரமப்படும் 1512 தயாரிப்பாளர்களில் 12 பேர் உன்னை வைத்துப் படமெடுத்தவர்கள்.


விஷால் தம்பி வாயை அடக்கிப் பேசு நாவடக்கம் தேவை.


தம்பி விஷால் நீங்க நடிச்ச மதகஜராஜா (MGR) படம் ரூ. 30 கோடி பிரச்சினையில் உள்ளது.


அந்த பிரச்சினையை தீர்த்து வச்சீட்டீங்களா?


இன்னும் உன்னைப் பற்றி ஏராளமான புகார்கள் இருக்கின்றன.


வரும் மார்ச் 26ஆம் தேதி அவற்றை ஆதாரங்களுடன் வெளியிடுவேன்” என்று ஆவேசமாக பேசினார் தாணு.

0 comments:

Post a Comment