வரிச்சலுகைக்காக பவரை இழந்த பாண்டி
23 மார்,2017 - 11:01 IST
தனுஷ் முதன் முறையாக இயக்கி உள்ள படம் பவர் பாண்டி. இதில் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா சாயா சிங், வித்யூலேகா ராமன், ஆடுகளம் நரேன் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார்.
60 வயது கடந்த ஒரு சினிமா சண்டை கலைஞனின் வாழ்க்கைதான் பவர் பாண்டி. திருநெல்வேலியிலிருந்து சென்னை வந்து சினிமாவில் சண்டை கலைஞனாகும் பவர் பாண்டி வயதான பிறகு பிள்ளைகளாலும், சமூகத்தாலும் புறக்கணிக்கப்படுவதும். அதை அவர் எதிர்கொள்வதுதுமதான கதை. இதில் ராஜ்கிரண் பவர் பாண்டியாக நடித்துள்ளார். அவரது தோழியாக ரேவதி நடித்துள்ளார். மகனாக பிரசன்னாவும் மருமகளாக சாயாசிங்கும் நடித்துள்ளனர். தனுஷ் இளம் வயது ராஜ்கிரணாக நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு ராஜ்கிரண் கேரக்டர் பெயரான பவர் பாண்டி என்பதையே தனுஷ் தலைப்பாக வைத்திருந்தார். அப்படியே விளம்பரமும் செய்யப்பட்டு வந்தது. படத்திற்கு கண்டிப்பாக யு சான்றிதழ் கிடைக்கும் ஆனால் வரிவிலக்கு கிடைக்காது. காரணம் பவர் என்பது ஆங்கிலச் சொல். அரசு விதியின்படி தலைப்பில் ஆங்கிலம் இருந்தால் வரிவிலக்கு கேட்டு விண்ணப்பிக்கவே முடியாது. எனவே தனுஷ் இப்போது படத்தின் தலைப்பை ப.பாண்டி என்று மாற்றி விட்டார். பாண்டியின் இன்ஷியல் ப. என்பதாக பொருள். விளம்பரங்களில் பவர் பாண்டி என்றும் திரையில் ப.பாண்டி என்றும் இரு தலைப்புகளை பயன்படுத்த தனுஷ் முடிவு செய்திருக்கிறார்.
0 comments:
Post a Comment