கடம்பன் சிங்கிள் டிராக்கை வெளியிடும் ஜெயம் ரவி
23 மார்,2017 - 11:09 IST
ராஜ்கிரண், விமல், லட்சுமிமேனன் நடித்த மஞ்சப்பை படத்தை இயக்கியவர் ராகவன். அந்த படத்தை அடுத்து கடம்பன் படத்தை இயக்கியிருக்கிறார். பிரபுசாலமனின் கும்கியைத் தொடர்ந்து இந்த படத்திலும் யானைகள் நடித்துள்ளன. அந்த படத்தில் ஒரு யானை என்றால், இந்த படத்தில் சுமார் 70 பாங்காக் நாட்டு யானைகள் நடித்துள்ளன. பழங்குடியின மக்களின் வாழ்வியல் கதையில் உருவாகியுள்ள இந்த படத்திற்காக தனது உடல்கட்டை மாற்றி நடித்திருக்கும் ஆர்யா, தனக்கு இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்த்திருக்கிறார்.
மேலும், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி விட்டது. இதன் டிரைலர் யு-டியூப்பில் வெளியாகி விட்ட நிலையில், வருகிற மார்ச் 24-ந்தேதி அதாவது நாளை மாலை 5 மணிக்கு ‛‛ஒத்த பார்வையில்...'' என்று தொடங்கும் கடம்பன் பட பாடலின் சிங்கிள் டிராக் வெளியாக உள்ளது. இதை நடிகர் ஜெயம்ரவி தனது டுவிட்டரில் வெளியிடுகிறார். இந்த தகவலை கடம்பன் பட டைரக்டர் ராகவன் வெளியிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment