Wednesday, March 15, 2017

‘கண்ணா… கலக்கீட்டீங்க…’ மாநகரம் படத்திற்கு ரஜினி பாராட்டு


Rajinikanth congratulated Maanagaram movie teamஎதிர்பார்ப்பே இல்லாமல் வெளியாகும் படங்கள் பல சமயங்களில் எவரும் எதிர்பாராத வகையில் பெரியளவில் வரவேற்பை பெற்று விடுகின்றன.


சமீபத்தில் வெளியான குற்றம் 23, நிசப்தம் மற்றும் மாநகரம் ஆகிய படங்களை இந்த வரிசையில் சேர்க்கலாம்.

சமீபத்தில் குற்றம் 23 மற்றும் மொட்ட சிவா கெட்ட சிவா படங்களை பார்த்த ரஜினிகாந்த் பாராட்டியிருந்தார்.

இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி, எஸ்.ஆர். பிரபு தயாரித்த மாநகரம் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார் ரஜினி.

இயக்குநர் லோகேஷ் கனகராஜை தொலைபேசியில் தொடர்புகொண்டு “கண்ணா ஹா ஹா” படம் பார்த்தேன் கலக்கிட்டிங்க , சூப்பர்.. நல்ல படம் சீட் நுனியில் உட்கார்ந்து தான் படத்தை பார்த்தேன்.. கலக்குங்க , கலக்குங்க என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்பு இதே எஸ். ஆர். பிரபு தயாரித்த “ஜோக்கர்” படத்தையும் ரஜினிகாந்த் பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajinikanth congratulated Maanagaram movie team

0 comments:

Post a Comment