சந்திரகாந்தாவை கைப்பற்றுவது யார்? சேனல்களுக்கிடையே போட்டி
15 மார்,2017 - 11:07 IST
20 வருடங்களுக்கு முன்பு தூர்தர்ஷனில் வெற்றிகரமாக ஒளிபரப்பான தொடர் சந்திரகாந்தா. மகாபாரதத்தை போன்றே இந்தியில் ஒளிபரப்பானாலும் தமிழ் மக்கள் அதன் பிரமாண்டத்துக்காக விரும்பி பார்த்த தொடர். சபாஷ்கான், ஷிகா ஸ்வரூப் ஹீரோ, ஹீரோயினாக நடித்திருந்தார்கள். இப்போது அதே சந்திரகாந்தா புதிய தொழில்நுட்பத்துடனும், இன்னும் பிரமாண்டத்துடனும் ரீமேக் ஆகிவருகிறது.
ப்ரேம் யா பஹேலி சந்திரகாந்தா என்பது ரீமேக் தொடரின் டைட்டில். இதில் கவுரவ் கண்ணாவும், கிரித்திகா கம்ராவும் ஹீரோ ஹீரோயினாக நடிக்கிறார்கள். இவர்களுடன் அன்கிட் அரோரா, சுரேஷ் பெர்ரி, ஹரிஷ் வசிஸ்ட், புனித் வசிஸ்ட் நடிக்கிறார்கள். சோனாலி பகடே, சசிந்தா ஹென்னா, ஷப்ட் மரபோபென், மேத்தீவட் ஜென்கிஸ் இயக்குகிறார்கள்.
கடந்த 4ந் தேதி முதல் லைப் ஓகே சேனலில் ஒளிபரப்பு தொடங்கியுள்ளது. ஆரம்ப எபிசோட்களே கடும் எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது. பிரமாண்ட இந்தி தொடர்களை ஒளிபரப்பாகும்போதே வாங்கி டப் செய்து ஒளிபரப்பும் முன்னணி சேனல்கள் சந்திரகாந்தாவையும் வாங்கி ஒளிபரப்ப கடும் போட்டியிடுகிறன்றன. ஆனால் இதுரை எந்த தமிழ் சேனலும் முடிவாகவில்லை. பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. 15 எபிசோட்களுக்கு பிறகு தமிழ் சேனல்களிலும் சந்திரகாந்தாவை பார்க்கலாம்.
0 comments:
Post a Comment