Sunday, March 19, 2017

சினிமாவில் நடித்து சம்பாதித்து கார் வாங்கிய சுரபி!


சினிமாவில் நடித்து சம்பாதித்து கார் வாங்கிய சுரபி!



19 மார்,2017 - 10:13 IST






எழுத்தின் அளவு:








விக்ரம்பிரபு நடித்த இவன் வேற மாதிரி படத்தில் நாயகியாக நடித்தவர் டெல்லி அழகி சுரபி. அந்த படத்திற்கு பிறகு வேலையில்லா பட்டதாரி, புகழ் படங்களில் நடித்தவர் தற்போது அடங்காதே படத்தில் நடித்து வருகிறார். மேலும், தெலுங்கில் இதுவரை நான்கு படங்களில் நடித்துள்ள சுரபிக்கு எல்லா படங்களுமே ஹிட்டாக அமைந்திருப்பதால் அங்கு பேசப்படும் நடிகையாகியிருக்கிறார். தற்போது பவன் கல்யாண் நடிக்கும் ஒரு படத்திலும் கமிட்டாகியிருக்கிறார் சுரபி.

ஆக, தமிழை விட தெலுங்கில் முன்னணி நடிகை பட்டியலில் இடம்பிடித்து விட்ட சுரபி, சினிமாவில் நடிகையாகி நான்கு ஆண்டுகளில் தெலுங்கு படங்களில் நடித்துதான் ஓரளவு சம்பாதித்திருக்கிறாரம். அப்படி தான் நடித்து சம்பாதித்த பணத்தைக்கொண்டு சமீபத்தில் ஜாகுவார் ரக கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். அந்த காருடன் தான் நிற்கும் புகைப்படமொன்றை தனது சினிமா நண்பர் களுக்கு அனுப்பி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு வருகிறார் சுரபி


0 comments:

Post a Comment