Sunday, March 19, 2017

அது இது எதுவில் கவனம் செலுத்தும் மா.கா.பா


அது இது எதுவில் கவனம் செலுத்தும் மா.கா.பா



19 மார்,2017 - 13:43 IST






எழுத்தின் அளவு:








விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் நட்சத்திர நிகழ்ச்சி அது இது எது. சிவகார்த்திகேயன் மூலம் புகழ்பெற்ற இந்த நிகழ்ச்சியை இப்போது மா.கா.பா.ஆனந்த் நடத்தி வருகிறார். சிவகார்த்திகேயன் போலவே மா.கா.பாவும் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். வானவராயன் வல்லவராயன் படத்தில் இரண்டாவது ஹீரோவாக அறிமுகமானார். அதன்பிறகு நவரச திலகம், கடலை, அட்டி படங்களில் நடித்தார். எந்த படமும் வெற்றி பெறவில்லை. தற்போது பஞ்சுமிட்டாய், மாணிக் படங்களில் நடித்து வருகிறார்.

சினிமா எதிர்பார்த்த உயரத்தை தரவில்லை என்பதால் அவர் நடத்தி வரும் அது இது எது நிகழ்ச்சியை கெட்டியாக பிடித்துக் கொண்டார். தற்போது இந்த நிகழ்ச்சி 330 எபிசோட்களுடன் 7வது ஆண்டை நிறைவு செய்திருக்கிறது. தற்போது சிங் இன் தி ரெய்ன், சிரிச்சா போச்சு, கக்கக்கப்போ என 3 ரவுண்டுகளுடன் நடந்து வருகிறது. மேலும் சில அம்சங்களை சேர்த்து நிகழ்ச்சியை பொலிவூட்ட இருக்கிறார்கள். "அது இது எது நிகழ்ச்சிதான் மனசுக்கு நிறைவைத் தருகிறது. கடற்கரையில் நடப்பது போன்ற புத்துணர்ச்சியை தருகிறது. வேடிக்கையும் சந்தோஷமுமாக இருக்கிறது" என்கிறார் மா.பா.கா.ஆனந்த்.


0 comments:

Post a Comment