வாய்ப்புக்காக நடிகைகளை அந்த விஷயத்திற்கு அழைப்பது உண்மைதான் - கஸ்தூரி
13 மார்,2017 - 12:39 IST
சினிமா வாய்ப்பு பெறுவதற்காக நடிகைகளை அந்த விஷயத்திற்கு அழைப்பது உண்மை தான் என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபலமாக திகழ்ந்தவர் நடிகை கஸ்தூரி. ஆத்தா உன் கோயிலிலே, சின்னவர், அமைதிப்படை, எங்க முதலாளி, புதிய முகம்... உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அமெரிக்க டாக்டரை மணந்த பின்னர் அங்கேயே செட்டிலாகிவிட்டார். அவ்வப்போது, சென்னை வந்து போவார். சமீபத்தில் சென்னை வந்த இவர் அளித்த பேட்டி ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அது என்ன என்று பார்ப்போம்... சினிமா தொழில் என்பது சிரமமான ஒன்று. நடிப்புக்காக நடிகைகள் அதிக உடல் உழைப்பை வழங்க வேண்டி இருக்கும். முதல்நாள் இரவு சரியாக தூங்கவில்லை என்றால் கூட மறுநாள் ஷூட்டிங்கில் அவர்களது முகத்தில் அது வெளிப்பட்டு விடும். ஒரு ஹீரோவுடன், தற்போது அவர் அரசியல்வாதியாக உள்ளார். அவருடன் நான் ஒரே ஒரு படத்தில் தான் நடித்தேன். படப்பிடிப்பில் என்னை சீண்டிக்கொண்டே இருப்பார், அவரால் சில படங்களின் வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் போனது.
சினிமா வாய்ப்புக்காக சில சமயங்களில் நடிகைகளை அந்த விஷயத்திற்கு(படுக்கைக்கு) அழைப்பது உண்மை தான். சினிமா மட்டுமல்ல, எல்லா தொழில்களிலும் இது போன்று நடக்கத்தான் செய்கிறது. அடுத்தவர்களை பிரச்னைக்கு மாட்டிவிட ஒரு கூட்டம் தனியாக செயல்பட்டு வருகிறது. சினிமா பிரபலங்களின் படுக்கை அறையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளதான் அனைவரும் ஆர்வமாய் உள்ளனர் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment