தணிக்கையில் யு சான்றிதழ் பெற்ற கட்டமராய்டு
17 மார்,2017 - 09:42 IST
சர்தார் கபார் சிங் படத்திற்கு பின்னர் டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்திருக்கும் கட்டமராய்டு திரைப்படம் திரைக்கு தயாராகி விட்டது. தமிழில் அஜித்-தமன்னா நடிப்பில் வெற்றி பெற்ற வீரம் படத்தின் ரீமேக்கான கட்டமராய்டு படத்தை இயக்குனர் டாலி இயக்கியுள்ளார். அனுப் ரூபனஸ் இசையில் உருவான இப்பட பாடல்கள் மற்றும் டிரைலர் ஏற்கனவே ஹிட் அடித்துள்ளன. மார்ச் இறுதியில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. தணிக்கைக்குழுவிற்கு திரையிடப்பட்ட கட்டமராய்டு திரைப்படம் தணிக்கையில் யு சான்றிதழ் பெற்றுள்ளது. கபார் சிங் படத்தில் பவன் கல்யாணுடன் ஜோடி சேர்ந்து நடித்த ஷ்ருதிஹாசன் கட்டமராய்டு படத்தில் மீண்டும் இணைந்து நடித்துள்ளார். நார்த் ஸ்டார் என்டர்டையின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் கட்டமராய்டு திரைப்படம் மார்ச் 24ல் திரைக்கு வரவுள்ளது.
0 comments:
Post a Comment