Friday, March 17, 2017

இம்முறையாவது மஞ்சு விஷ்ணு - அமைரா ஜோடி சேருமா


இம்முறையாவது மஞ்சு விஷ்ணு - அமைரா ஜோடி சேருமா



17 மார்,2017 - 09:51 IST






எழுத்தின் அளவு:








அனேகன் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மூன்றுவித கெட்டப்புகளில் நடித்த அமைரா தஸ்துர் அதன்பின்னர் அதிக தமிழ் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் கோலிவுட்டில் காணமல் போனார் அமைரா. ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த அமைராவை மஞ்சு விஷ்ணுவின் எடோ ராகம் அடோ ராகம் படத்தில் நாயகியாக நடிக்க வைக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அமைரா அப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் மஞ்சு விஷ்ணு இயக்குனர் நாகேஷ்வர ரெட்டி இயக்கத்தில், நடிக்கவிருக்கும் அசரி அமெரிக்க யாத்ரா எனும் படத்தில் மீண்டும் அமைராவை நாயகியாக நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றதாம். முதற்கட்ட பேச்சுவார்த்தையில் தனக்கு கூறப்படும் கதாபாத்திரம் பிடித்திருப்பதாகக் கூறியுள்ள அமைரா கால்ஷீட் ஒத்துவந்தால் இப்படத்தில் நடிப்பதாக உறுதி அளித்துள்ளாராம். திருப்பதியில் துவங்கவிருக்கும் இப்படம் நகைச்சுவை மற்றும் காதல் கதையம்சத்தில் உருவாகவுள்ளதாம். நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் இப்படத்தில் முக்கியவேடத்தில் நடிக்கின்றார்.


0 comments:

Post a Comment