Monday, March 13, 2017

தொகுப்பாளினி பாவனா டுவிட்டரும் ஹேக் செய்யப்பட்டது!


தொகுப்பாளினி பாவனா டுவிட்டரும் ஹேக் செய்யப்பட்டது!



13 மார்,2017 - 09:49 IST






எழுத்தின் அளவு:








ஜல்லிக்கட்டு போராட்டம் வெடித்தபோது, பீட்டாவில் இணைந்திருக்கும் திரிஷாவுக்கு ஜல்லிக்கட்டு ஆரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். டுவிட்டரில் கடுமையான வார்த்தைகளால் சாடினர். அப்போது மனசொடிந்து போன திரிஷாவுக்கு விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா, நீங்கள் உங்கள் முடிவில் உறுதியாக இருங்கள் என்று தனது டுவிட்டரில் ஆதரவு தெரிவித்திருந்தார்.

அதையடுத்து, நடிகை வரலட்சுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களை பாதுகாக்க சேவ் சக்தி அமைப்பு தொடங்கி கையெழுத்து வேட்டை நடத்தியபோது, உங்களை தேடி இன்னும் நிறையபேர் வருவார்கள் என்று அவரை உற்சாகப்படுத்தும் விதத்தில் டுவிட் செய்திருந்தார்.

ஆனால் அதையடுத்து யாரோ மர்ம நபர்கள், தொகுப்பாளினி பாவனாவின் டுவிட்ரை ஹேக் செய்து விட்டார்களாம். இதை தெரிவித்துள்ள பாவனா, இந்த மோசமான வேலையை செய்தவர்கள் யார் என்று கண்டுபிடிப்பேன் என்று கூறியிருப்பவர் தனக்கு ஆதரவு கொடுத்து வருபவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment