விருதுபெற்ற விநாயகனை முதல் ஆளாக வாழ்த்திய மோகன்லால்..!
11 மார்,2017 - 15:46 IST
ஒரு நடிகராக விநாயகன் திரையுலகில் அடியெடுத்து வைத்து கிட்டத்தட்ட இருபது வருடங்கள் ஓடிவிட்டன.. 'திமிரு' படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் கையாளாக ஒரு காலை விந்தியபடியே 'அக்கா அக்கா' என அழைத்தபடி நடித்து அனைவரையும் கவர்ந்த விநாயகன் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமானவர்தான்.. தான் ஏற்கும் கதாபாத்திரங்களில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் விநாயகனுக்கு இதுவரை எந்த விருது அங்கீகாரமும் கிடைக்காமல் இருந்துவந்தது. இப்போது அவரது மனக்குறையை தீர்க்கும் விதமாக கடந்த வருடம் 'கம்மட்டிப்பாடம்' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருது இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் அந்தப்படத்தின் கதாநாயகனாக நடித்தவர் துல்கர் சல்மான் என்பது வேறு விஷயம்.
இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே விநாயகனுக்கு இரண்டு முக்கியமான நபர்களிடம் இருந்து போனில் வாழ்த்து செய்தி வந்தது. ஒன்று கேரள முதல்வர் பிணராயி விஜயனிடமிருந்து.. இன்னொன்று சூப்பர்ஸ்டார் மோகன்லாலிடமிருந்து.. மோகன்லால் விநாயகனை முதல் ஆளாக அழைத்து வாழ்த்து தெரிவிக்க காரணமும் இருக்கிறது.. இருபது வருடங்களுக்கு முன் மோகன்லால் நடித்த 'மாந்திரீகம்' என்கிற படத்தில் தான் விநாயகன் அறிமுகமானார்.. அதன்பின் மோகன்லாலுடன் இணைந்து 'ஒன்னமேன்', 'சோட்டா மும்பை', 'சாகர் அலைஸ் ஜாக்கி' என சில படங்களில் நடித்துள்ளார். அந்த அன்பின் அடிப்படையில் தான் மோகன்லால் விநாயகனுக்கு வாழ்த்து கூறியுள்ளாராம்
0 comments:
Post a Comment